search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு
    X

    இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு செய்தார்.
    ஜெய்ப்பூர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே மற்றும் லடாக் பகுதியில் வாழ்ந்துவரும் மக்களை நேரில் சந்தித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை ஒட்டியுள்ள இந்தியாவின் நான்கு எல்லையோரப் பகுதி பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் நேற்று ஜெய்சால்மர் நகரில் விரிவான ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில முதல் மந்ஹ்டிரி வசுந்தரா ராஜே, பஞ்சாப் துணை முதல் மந்திரி சுக்பிர் சிங் பாதல், குஜராத் உள்துறை இணை மந்திரி பிரதீப்சின் ஜடேஜா, ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை செயலாளர் பிரிஜ் ராஜ் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பார்மர் மாவட்டத்தில் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    இங்குள்ள எல்லை பகுதியை கண்காணித்துவரும் பாதுகாப்புப்படை உயரதிகாரிகளுடன் நடைபெற்ற இன்றைய ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு உடனிருந்தார்.
    Next Story
    ×