search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேசத்தில் அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டு: 3 குழந்தைகள் பலி
    X

    மத்திய பிரதேசத்தில் அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டு: 3 குழந்தைகள் பலி

    மத்திய பிரதேசத்தில் போபால் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட மின்வெட்டால் 3 குழந்தைகள் பலியானது.
    போபால்:

    போபால் அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டால் 3 குழந்தைகள் பலியானது.

    மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் எடை குறைவாக பிறந்த குழந்தைகள் இன்கு பேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு திடீர் என்று ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் இன்குபேட்டரில் இருந்த 3 குழந்தைகள் மூச்சு திணறி இறந்தன. இதை அறிந்த பெற்றோர் பதறி துடித்தனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் மின்வெட்டு காலங்களில் பயன்படுத்துவதற்காக ஜெனரேட்டர் வசதி உள்ளது. ஆனால் அன்றைய தினம் மின்வெட்டு ஏற்பட்ட போது ஜெனரேட்டர் பயன் படுத்தப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

    இதையடுத்து இது பற்றி விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தர விட்டுள்ளார். ஆஸ்பத்திரி ஊழியர்களின் அலட்சியப்போக்கால் தான் 3 குழந்தைகளும் உயிர் இழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    3 குழந்தைகள் பலியான இந்த ஆஸ்பத்திரிக்குதான் மாநிலத்திலேயே சிறந்த மகப்பேறு மருத்துவமனை என்ற விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×