என் மலர்

  செய்திகள்

  3 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்: கராத்தே மாஸ்டர் கைது
  X

  3 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்: கராத்தே மாஸ்டர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திர மாநிலத்தில் மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனியார் பள்ளியைச் சேர்ந்த கராத்தே ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  ஐதராபாத்:

  ஆந்திர மாநிலத்தில் மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனியார் பள்ளியைச் சேர்ந்த கராத்தே ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத் அருகேயுள்ள கஷாய்குடா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவ - மாணவியருக்கு தற்காப்பு கலையான ‘கராத்தே’ கற்றுத்தரும் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாய் குமார்.

  கடந்த வாரம் இதே பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும் மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

  இதனையடுத்து, இளம்சிறார் பாலியல் வன்கொடுமை உள்பட் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்ம் சாய் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×