search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான பயணத்தின் போது விமானிகளை சோதனையிட்ட ராகுல் பாதுகாப்பு அதிகாரிகள்
    X

    விமான பயணத்தின் போது விமானிகளை சோதனையிட்ட ராகுல் பாதுகாப்பு அதிகாரிகள்

    ராகுல் பயணம் செய்த விமானத்தின் விமானிகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டதால் அதிருப்தி அடைந்தனர்.
    புதுடெல்லி:

    ராகுல் பயணம் செய்த விமானத்தின் விமானிகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டதால் அதிருப்தி அடைந்தனர்.

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 14-ந் தேதி அவர் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்டிகோ தனியார் விமானத்தில் வாரணாசி சென்றார்.

    அவர் மற்ற பயணிகளுடன் சேர்ந்து பயணம் செய்தார். முன்னதாக ராகுல் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் விமானிகளின் லைசன்ஸ்கள் உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிட்டனர். இதே போல் விமானத்தின் எரிபொருள் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர். இதனால் விமானம் 45 நிமிடம் தாமதமாக சென்றது.

    இந்த சோதனையால் விமானிகளும், ஊழியர்களும் அதிருப்தி அடைந்தனர். முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் ஏர்இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் சிறந்த அனுபவம் வாய்ந்த விமானிகளை அன்றைய தினம் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம். ஆனால் விமானிகளின் லைசென்ஸ்களை வாங்கிப் பார்த்து சோதனையிடுவது இல்லை.

    முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் விமானத்தில் சோதனை நடத்தும் போது அதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தப்படும். ஆனால் ராகுல் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையால் விமானம் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

    மேலும் விமான போக்குவரத்து இயக்குனரகம் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் விமானத்தின் எரிபொருளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் ராகுல் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×