search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெஜ்ரிவால் அரசின் 21 செயலாளர்கள் நியமனம் ரத்து: ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
    X

    கெஜ்ரிவால் அரசின் 21 செயலாளர்கள் நியமனம் ரத்து: ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

    டெல்லியில் கெஜ்ரிவால் நியமித்த 21 செயலாளர்கள் நியமன உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் கெஜ்ரிவால் நியமித்த 21 செயலாளர்கள் நியமன உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

    டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் பாராளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இது மந்திரிகளுக்கு இணையான பதவியாகும். இதற்கான சட்ட திருத்த மசோதா டெல்லி சட்டசபையில் கொண்டுவரப்பட்டது.

    இந்த நியமனத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார்.

    எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஒரே சமயத்தில் ஆதாயம் அளிக்கக் கூடிய இரு பதவிகளை வகிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இந்த அடிப்படையில் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

    இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது கெஜ்ரிவால் அரசு நியமித்த 21 செயலாளர்கள் நியமனம் செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பு முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

    Next Story
    ×