search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக வழக்கு: நடிகருக்கு ஆதரவாக மாணவிகளை மிரட்டிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு
    X

    நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக வழக்கு: நடிகருக்கு ஆதரவாக மாணவிகளை மிரட்டிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

    நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக வில்லன் நடிகர் கைது செய்யப்பட்ட வழக்கில், நடிகருக்கு ஆதரவாக மாணவிகளை மிரட்டிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஒற்றப்பாலம் பத்திரிபாலா என்ற இடத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர்.

    அப்போது அங்கு காரில் வந்த மலையாள வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி, மாணவிகளை பார்த்து ஆபாசமாக சைகை காட்டினார். மேலும் அவர், மாணவிகள் முன்பு நிர்வாணமாக போஸ் கொடுத்து விட்டு காரில் தப்பி சென்று விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். மாணவிகள் குறித்து கொடுத்த காரின் பதிவு எண்ணும் போலீசில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதுபற்றி ஒற்றப்பாலம் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை. மேலும் புகார் கொடுத்த மாணவிகள் படிக்கும் பள்ளிக்கு போலீசார் சென்று அந்த பள்ளிக்கூட முதல்வரையும் மாணவிகளையும் மிரட்டி உள்ளனர்.

    இதுபற்றி பள்ளி முதல்வர் பாலக்காடு கலெக்டர் மேரி குட்டியிடம் புகார் செய்தார். அவர் உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடித்தது. மாணவிகள் முன்பு நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக ஸ்ரீஜித் ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீஜித் ரவி பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மாணவிகளை மிரட்டியது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் ஒற்றப்பாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதம்கான், ஏட்டு ராஜசேகரன் உள்பட 5 போலீசார் பள்ளிக்கூடத்திற்கு சென்று மாணவிகளை மிரட்டியது தெரிய வந்தது.

    இது தொடர்பான அறிக்கை போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஏட்டு ராஜசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×