search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலி: முதல்-மந்திரி பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு
    X

    போலீசார் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலி: முதல்-மந்திரி பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

    மராட்டியத்தில் போலீசார் தாக்கப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண வலியுறுத்தி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று சந்தித்து பேசினார்.
    மும்பை:

    மராட்டியத்தில் போலீசார் தாக்கப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண வலியுறுத்தி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று சந்தித்து பேசினார். 

    மராட்டியத்தில் போலீசார் தாக்கப்படும் சம்பவம் வாடிக்கையாகி விட்டது. சமீபத்தில், மும்பையில் விலாஸ் ஷிண்டே என்ற போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரின் குடும்பத்தினர் சமீபத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்ட னர்.

    இதனைத் தொடர்ந்து, மும்பை மலபார் ஹில் பகுதி யில் அமைந்துள்ள முதல்- மந்திரி தேவேந்திர பட்னா விசின் அதிகாரப்பூர்வ ‘வர்ஷா’ இல்லத்தில், நேற்று காலை அவரை உத்தவ் தாக்கரே சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித் தார். அப்போது, உள்துறை இணை மந்திரி தீபக் கேசர்கர், சுபாஷ் தேசாய் மற்றும் திவாகர் ராவ்தே ஆகிய சிவசேனா மந்திரிகளும், போலீசாரின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

    பின்னர், வெளியே வந்த உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உள்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத் திருக்கும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தகுதியும், திறமையும் வாய்ந்த வர். ஆனால், அண்மைக் காலமாக அவருக்கு பணிச் சுமை அதிகரித்துவிட்டது. எனவே, போலீசார் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்காணிக்க உள்துறைக்கு என தனிப்பட்ட மந்திரி தேவை என்று நான் கருது கிறேன்.

    இந்த தருணத்தில், போலீசாரின் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் தாக்குதல்காரர்களுக்கு கடுமையான தண்டனை ஆகிய 3 விஷயங்களை நடைமுறைப்படுத்துமாறு முதல்-மந்திரியிடம் வலியுறுத் தினேன்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

    அதன்பின்னர், நிருபர் களிடம் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “போலீசாரின் குடும்பத்தினர் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்கும்” என்றார்.
    Next Story
    ×