என் மலர்

  செய்திகள்

  மத்திய மந்திரி வி.கே.சிங்கின் மனைவியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்
  X

  மத்திய மந்திரி வி.கே.சிங்கின் மனைவியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய மந்திரி வி.கே.சிங்கின் மனைவியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய பிரதீப் சவுகான் என்பவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
  புதுடெல்லி:

  மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங்கின் மனைவி பாரதி சிங். இவரது உறவினரின் நண்பரான பிரதீப் சவுகான் என்பவர் பாரதி சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பாரதி சிங் மற்றும் வி.கே.சிங் தொடர்பான சில ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் கூறினார்.

  அந்த படங்கள் வெளியானால் வி.கே.சிங்கின் பதவிக்கு ஆபத்து என்று மிரட்டிய பிரதீப் சவுகான், அவற்றை வெளியிடாமல் இருப்பதற்கு ரூ.2 கோடி பணம் வேண்டும் எனவும் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

  இது குறித்து பாரதி சிங் டெல்லி துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரதீப் சவுகானை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதற்காக சிறப்புப்படை ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
      

  Next Story
  ×