search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தின விழா விசே‌ஷ ஏற்பாடு: இந்தியா முழுவதும் மூவர்ண கொடி பேரணி
    X

    சுதந்திர தின விழா விசே‌ஷ ஏற்பாடு: இந்தியா முழுவதும் மூவர்ண கொடி பேரணி

    70-வது சுதந்திர தினத்தை ஒரு வாரத்துக்கு கொண்டாட பா.ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு தேசிய கொடி பேரணி என்று பெயரிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் 70-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார்.

    இதுபோல் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கொடியேற்று விழாக்களும், நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    இதற்கிடையே 70-வது சுதந்திர தினத்தை ஒரு வாரத்துக்கு கொண்டாட பா.ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும். இதற்கு தேசிய கொடி பேரணி என்று பா.ஜனதா பெயரிட்டுள்ளது.

    சுதந்திர தினத்தன்று பா.ஜனதா அலுவலகங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாநில தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    தேசிய கொடி பேரணியில் நடிகர் அமிதாப்பச்சன், பாடகிகள் லதா மங்கேஸ்கர், ஆஷா போன்ஸ்லே மற்றும் நடிகர்-நடிகைகள், பிரபலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரபலங்கள் மற்றும் பொது மக்களையும் கொடி பேரணியில் பங்கேற்கச் செய்ய பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.

    சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் உள்ள அருணாச்சலப்பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களிலும், எல்லைப் பகுதியிலும் கொடி பேரணி நடைபெறுகிறது.

    நாட்டு மக்களிடையே தேசப்பற்றை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக பா.ஜனதா கட்சி ஒரு வாரத்துக்கு இந்த தேசிய கொடி பேரணி நிகழ்ச்சி நடத்தி கொண்டாட முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×