search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேதாஜி தொடர்பான ஐந்தாவது தொகுப்பு ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு
    X

    நேதாஜி தொடர்பான ஐந்தாவது தொகுப்பு ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 25 ஆவணங்கள் அடங்கிய ஐந்தாவது தொகுப்பை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது.
    புதுடெல்லி:

    விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடைய ஆவணங்களை மத்திய அரசு கடந்த சில மாதங்களாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

    ஜனவரி மாதம் அவரது பிறந்த தினத்தையொட்டி 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் மார்ச் மாதம் சில ஆவணங்களும், ஏப்ரல் மற்றும் மே மாதம் சில ஆவணங்களும் வெளியிடப்பட்டன. பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்த ஆவணங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

    இந்நிலையில், நேதாஜி தொடர்பான 25 ஆவணங்கள் அடங்கிய ஐந்தாவது தொகுப்பை  மத்திய கலாச்சாரத்துறை இன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகம், உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களிடம் இருந்தவை ஆகும்.
    Next Story
    ×