search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியாவுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்
    X

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியாவுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்

    டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ தினேஷ் மொகானியாவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி சங்கம் விகார் தொகுதியின் எம்.எல்.ஏ.வான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தினேஷ் மொகானியா, குடிநீர் வாரியத்தின் துணை தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க வந்த பெண்களை தரக்குறைவாக நடத்தியதாகவும், பெண் ஒருவரை தாக்கியதாகவும் தினேஷ் மொகானியா மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    பின்னர், ஜூலை 25-ம் தேதி மொகானியா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, அவரை போலீசார் கைது செய்தனர். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை ஜூலை 11-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து மீண்டும் தினேஷ் மொகானியா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தனர்.
    Next Story
    ×