search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாக்பூரில் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை உயிரிழந்தது
    X

    நாக்பூரில் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை உயிரிழந்தது

    நாக்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை மூச்சுதிணறலால் உயிரிழந்தது
    மும்பை :

    நாக்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை மூச்சுதிணறலால் உயிரிழந்தது.

    நாக்பூரில் உள்ள லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் இளம்பெண் ஒருவருக்கு தோல் இல்லாமல் அதிசய பெண் குழந்தை பிறந்தது. தோல் இல்லாததன் காரணமாக அந்த குழந்தையின் உள்ளுறுப்புகள் வெளியே தெரிந்தபடி இருந்தன.

    குழந்தையின் முகத்தில் கண்கள் மற்றும் வாய் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. மூக்கு தோற்றம் இல்லாமல் நாசிதுவாரங்கள் மட்டுமே இருந்தன.

    ஆனால் அந்த குழந்தை பிறந்த உடன் சராசரி குழந்தையை போல் அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதை தொடர்ந்து குழந்தை பிரத்யேக வார்டில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை திடீரென குழந்தையின் இதய துடிப்பு பலவீனம் அடைந்து மூச்சுதிணறலால் அவதிப்பட்டது.

    சிறிது நேரத்தில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சுவாச கோளாறால் குழந்தை உயிரிழந்ததை மருத்துவக்கல்லூரி டீன் கஜல் மித்ரா உறுதிப்படுத்தினார். 
    Next Story
    ×