search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரதமரை ஜெயலலிதா சந்திப்பதால் பயன் இல்லை: முதல்-மந்திரி சித்தராமையா சொல்கிறார்
    X

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரதமரை ஜெயலலிதா சந்திப்பதால் பயன் இல்லை: முதல்-மந்திரி சித்தராமையா சொல்கிறார்

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமரை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
    பெங்களூரு:

    தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா அரசு சார்பில் நகரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமரிடம் காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறதே. அதேபோல் நீங்களும் கர்நாடகத்தில் இருந்து தூதுக்குழுவை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து பேசுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்து சித்தராமையா கூறியதாவது:-

    ‘‘காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரம் தற்போது நடுவர் மன்றத்தின் முன்பு உள்ளது. எனவே, பிரதமரை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேசுவதால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் பிரதமரை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை.

    மந்திரிசபையின் கூட்டத்தை நாளை(இன்று) கூட்டியுள்ளேன். பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதால் இந்த கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.

    பெங்களூருவில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய 10 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. பெங்களூருவில் சாலைகளில் உள்ள குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது. காவிரி குடிநீர் 5-வது ஸ்டேஜ் திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.’’

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×