search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: 11 மணி நிலவரப்படி 28.46 சதவீதம் வாக்குகள் பதிவு
    X

    கேரளாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: 11 மணி நிலவரப்படி 28.46 சதவீதம் வாக்குகள் பதிவு

    கேரள சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    கேரள சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 140 தொகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    கேரள கவர்னர் சதாசிவம், முதல் மந்திரி உம்மன் சாண்டி, கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, மத்திய முன்னாள் மந்திரி சசிதரூர், மாநில பா.ஜ.க. தலைவர் ஓ.ராஜகோபால், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    வாக்குப்பதிவு தொடங்கி நான்கு மணிநேரத்துக்கு பின்னர் காலை 11 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சராசரியாக 28.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கேரள மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக 31.03 சதவீதம் வாக்குகளும், தலைநகர் திருவனந்தபுரத்தில் மிககுறைந்தபட்சமாக 23.10 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×