search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாக மம்தா கட்சி மீது புகார்: தேர்தல் கமிஷனிடம் பா.ஜனதா குற்றச்சாட்டு
    X

    வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாக மம்தா கட்சி மீது புகார்: தேர்தல் கமிஷனிடம் பா.ஜனதா குற்றச்சாட்டு

    டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனிடம் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி மம்தா கட்சி மீது புகார் மனு அளித்துள்ளது
    புதுடெல்லி :

    டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனிடம் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான பூபேந்திர யாதவ் ஆகியோர் அடங்கிய குழு நேற்று புகார் மனு ஒன்றை அளித்தது.

    தேர்தல் கமிஷனர்களைசந்தித்துவிட்டு வெளியே வந்த முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேற்கு வங்காள முதல் கட்டத் தேர்தலின்போது, சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 100 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடிகளை கைப்பற்றி ஓட்டுப் போட்டதால்தான் இதுபோல் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஓட்டுகள் பதிவாகி இருப்பதே எங்களின் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் ஆகும். இது மிகவும் கவலைக்குரியது.

    மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படையினரையும் அதிகம் காணவில்லை. தேர்தல் பார்வையாளர்களும் போதுமான அளவில் இல்லை. இது தேர்தல் நடவடிக்கைகளில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் இல்லை என்பதையும் தேர்தல் கமிஷனிடம் தெரிவித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×