search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடையில் களமிறங்கும் நோக்கியா 3310: விற்பனை தகவல்கள்
    X

    கோடையில் களமிறங்கும் நோக்கியா 3310: விற்பனை தகவல்கள்

    எச்எம்டி குளோபல் தயாரித்து அறிமுகம் செய்த நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்களின் விற்பனை திட்டங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    எல்சிங்கி:

    எச்எம்டி குளோபல் எனும் நிறுவனம் நோக்கியா பிரான்டிங் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே அறிவித்ததை போன்று எச்எம்டி குளோபல் நிறுவனம் சில நோக்கியா போன்களை பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்தது. 

    நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 உள்ளிட்ட மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இவற்றின் விற்பனை இன்னும் துவங்கவில்லை. எதிர்பார்ப்புகளை ஏற்றி அமைதியாய் இருந்து வந்தாலும் நோக்கியா மொபைல் போன்களின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துவிட்டது. 

    அதன்படி நோக்கியா மொபைல் போன்கள் ஏப்ரல் மாத இறுதியில் மலேசியாவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நோக்கியா 3310 விற்பனை துவங்கி அதன்பின் மற்ற மாடல்களின் விற்பனை துவங்கலாம் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஒரே சமயத்தில் பல்வேறு சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 



    நோக்கியா 3310 சிறப்பம்சங்கள்:

    சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 3310 ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பில் 2.4 இன்ச் வளைந்த திரை, சூரிய வெளிச்சத்திலும் திரையை துல்லியமாக பார்த்து இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அழகிய புஷ் பட்டன்கள், 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் 2ஜி கனெக்டிவிட்டி, புதிய யூஸர் இன்டர்பேஸ், எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 16 எம்பி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 3310 சிங்கிள் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு வித மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. 



    நோக்கியா 3 சிறப்பம்சங்கள்:

    நோக்கியா 3 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளே பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் உள்ளன. 2560 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நான்கு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 



    நோக்கியா 5 சிறப்பம்சங்கள்:

    5.2 இன்ச் 1280 x 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 2ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 
     
    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.



    நோக்கியா 6 சிறப்பம்சங்கள்:

    நோக்கியா 6-இல் 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
    Next Story
    ×