என் மலர்

  செய்திகள்

  ரூ.2,799 விலையில் 4G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  X

  ரூ.2,799 விலையில் 4G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் 4G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாக பார்ப்போம்..
  புதுடெல்லி:

  இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்வைப் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பைவ் கொனெக்ட் 4G என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் பிரத்தியேகமாக ஷாப்க்ளூஸ் தளத்தில் மட்டும் 2,799 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பட்டியலில் இதன் விலை ரூ.3,999 என குறிப்படப்பட்டுள்ளது. 

  சிறப்பம்சங்களை பொருத்த வரை டூயல்-சிம் கொண்ட 4G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது. இத்துடன் 4.0 இன்ச் WVGA 480x800 ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

  ஆப்டிக் அம்சங்களை பொருத்த வரை 5 எம்பி பிரைமரி கேமரா, ஃபிளாஷ் மற்றும் 1.3 எம்பி (VGA) செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. 

  கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4G, வைபை, ப்ளூடூத், GPS / A-GPS மற்றும் மைக்ரோ யுஎஸ்பி உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 2000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதன் மூலம் 7 மணி நேர டாக் டைம், 150 மணி நேரத்திற்கு ஸ்டான்ட் பை நேரம் கிடைக்கும்.

  முன்னதாக ஸ்வைப் நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட்போனான எலைட் ஸ்டார் 3,333 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 4 இன்ச் WVGA (480x800) பிக்சல் டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1GB ரேம், 8GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
  Next Story
  ×