search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மாடியில் இருந்து குதித்து மதுராந்தகம் வாலிபர் தற்கொலை
    X

    ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மாடியில் இருந்து குதித்து மதுராந்தகம் வாலிபர் தற்கொலை

    • வாலிபரின் உடலை ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வயிறு வலியால் அவதிப்பட்டு வந்த கவுரி சங்கர் ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகும் அதில் இருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டவர்-1 மற்றும் டவர்-2 ஆகிய 2 கட்டிடங்களையும் இணைக்கும் சிறிய பாலம் போன்ற பகுதியில் இருந்து வாலிபர் ஒருவர் திடீரென கீழே குதித்தார்.

    சுமார் 30 அடி உயர மாடியில் இருந்து குதித்ததில் அவரது உடல் சிதறியது. இதைப்பார்த்ததும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஓடி வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரி வார்டுக்கு தூக்கி சென்றனர். பணியில் இருந்த டாக்டர்கள் விரைந்து வந்து பரிசோதித்ததில் வாலிபர் இறந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து வாலிபரின் உடலை ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் மாடியில் இருந்து குதித்த வாலிபரின் பெயர் கவுரி சங்கர் என்பது தெரிய வந்தது. 32 வயதான அவர் வயிற்று வலி மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இதற்காக கடந்த 9-ந்தேதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவுரி சங்கரின் தாய் விமலா உடனிருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில்தான் கவுரிசங்கர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    வயிறு வலியால் அவதிப்பட்டு வந்த கவுரி சங்கர் ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகும் அதில் இருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கவுரி சங்கரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    Next Story
    ×