என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் நயினார் நாகேந்திரன் கேட்டறிந்தார்.
    • ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள் என்று பாஜக தொண்டர் கூற சிரிப்பலை எழுந்தது.

    விருதுநகர் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது நயினார் நாகேந்திரனிடம் பேசிய பாஜக தொண்டர் ஒருவர், "நான் தேர்தலில் நின்றேன். உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.." என்று கூற அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.

    வெளிப்படையாக பேசிய பாஜக தொண்டரால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

    • பா.ஜ.க. என்ன தீண்டத்தகாத கட்சியா?
    • நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டணி அமைந்துள்ளதால் பா.ஜ.க.வின் பிரச்சனையை அ.தி.மு.க. பேசத்தான் செய்யும். அ.தி.மு.க.வின் பிரச்சனையை பா.ஜ.க.வும் பேசும்.

    * பா.ஜ.க. என்ன தீண்டத்தகாத கட்சியா?

    * அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. அச்சத்தில் உள்ளது.

    * நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

    * காலமும், சூழலும் மாறும்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
    • இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
    • ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், பனையடிபட்டி தெருவைச் சேர்ந்த பாலகுருசாமி (50 வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவகாசி வட்டம், தாயில்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் (50 வயது) மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் சாத்தூர் வட்டம், படந்தால், நடுத்தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி (37 வயது), சிவகாசி வட்டம், தாயில்பட்டி, பசும்பொன் நகரைச் சேர்ந்த ராஜசேகர் (29 வயது), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் ராம் (28 வயது) மற்றும் ரமேஷ் (20 வயது) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மருந்து கலக்கும் பணியின் போது விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவிலான நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று பட்டாசு தொழிற்சாலை 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கியது. முழுக்க முழுக்க பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆலையில் தொழிலாளர்கள் வந்து வேலையை தொடங்கினர். முன்னதாக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு காரணமாக திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதையடுத்து அருகில் இருந்த அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியதுடன், அதிக சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகளால் 16 அறைகள் இடிந்து தரைமட்டமானது. விபத்து நடந்த பட்டாசு ஆலையில் இருந்து பல மீட்டர் உயரத்திற்கு புகை கிளம்பியது. அதே போல் வெடிச்சத்தம் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பட்டாசு ஆலைக்கு திரண்டு வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் சிவகாசி, தாயில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அருகில் மீட்பு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதில் விபத்து நடந்த அறைகளுக்கு அருகே பலத்த காயங்களுடன் போராடிய ராஜசேகர், ராஜபாண்டி, கண்ணன், கமலேஷ், ராஜேஸ் ஆகிய 5 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதையடுத்து ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை நீக்கி பார்த்தபோது அங்கு பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்த பாலகுருசாமி என்பவர் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அடுத்தடுத்த அறைகளிலும் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.

    இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் மற்றும் போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மருந்து கலக்கும் பணியின் போது விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பட்டாசு ஆலை போர்மென் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். அதேபோல் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 1-ந்தேதி சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். அந்த சோகம் அடங்குவதற்குள் சாத்தூர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று காலை வழக்கம்போல் 8 மணிக்கு பட்டாசு ஆலை திறக்கப்பட்டது.
    • ஒரு அறையில் எதிர்பாராதவிதமாக உராய்வு காரணமாக வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து ஆலைகளிலும் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் ஆடி மாத அம்மன் திருவிழாக்களை முன்னிட்டு ஏராளமான ஆர்டர்களின் பேரில் அதிக அளவிலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமாக கோகுலேஷ் பட்டாசு தொழிற்சாலை சின்னக்காமன்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் சின்னகாமன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில் பெரும்பாலும் பேன்சி ரக பட்டாசுகளே அதிகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தரைச்சக்கரம், மத்தாப்பு, புஸ்வானம், பென்சில் வெடி உள்ளிட்டவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இன்று காலை வழக்கம்போல் 8 மணிக்கு பட்டாசு ஆலை திறக்கப்பட்டது.

    இதற்காக வெளியூர்களில் இருந்து தொழிலாளர்கள் வேன்களில் அழைத்து வரப்பட்டனர். முதல்கட்டமாக பேன்சிரக பட்டாசு தயாரிப்புக்கு தேவையான மருந்துகளை கலக்கும் பணியை தொழிலாளர்கள் செய்துகொண்டிருந்தனர். சற்று இடைவெளியுடன் கூடிய 5 வெவ்வேறு அறைகளிலும் மருந்து கலக்கும் பணிகள் நடந்தன.

    அப்போது ஒரு அறையில் எதிர்பாராதவிதமாக உராய்வு காரணமாக வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக வெடிகளுக்கும் தீ பரவியது. இந்த தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியதில் அங்கு பணியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியில் வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.

    அடுத்த ஒருசில விநாடிகளில் அந்த அறைகளிலும் விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகளும் இடிந்து தரைமட்டமானது. ஆனாலும் அங்கிருந்த மருந்து பொருட்கள், வெடிகள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்ததால் அருகில்கூட யாராலும் செல்ல முடியவில்லை. பின்னர் இதுபற்றி உடனடியாக சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் பெயர், விபரம் வருமாறு:-

    1. மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம்.

    2. ராமசாமிபுரத்தைச் சேர்ந்த வைரமணி.

    3. சூலக்கரையைச் சேர்ந்த லட்சுமி.

    4. அனுப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி.

    5. ராமமூர்த்தி

    6. ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி.

    7. ராமஜெயம்

    இந்த 7 தொழிலாளர்களும் உடல் சிதறி பலியானார்கள். இறந்தவர்களின் உடல் பாகங்கள் பல மீட்டர் தூரம் வரை சிதறி கருகிய நிலையில் கிடந்தது. மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இந்த பட்டாசு வெடி விபத்து மீட்பு பணியில் சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கட்டிட இடுப்பாடுகளுக்குள் மேலும் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்றும் தேடப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே விபத்து குறித்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பட்டாசு ஆலை முன்பு அங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்ல முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளை சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    • திருடப்பட்ட உண்டியலில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை காணிக்கை இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்ததனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கூரைக்குண்டு கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அனைத்து சமுதாயத்திற்கும் உட்பட்டது.

    இந்த கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் விசேஷ நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 2 அடி உயரமுள்ள சில்வர் உண்டியலை பெயர்த்து எடுத்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இன்று அதிகாலை கோவில் கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் சூலக்கரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் தடயங்களை சேகரித்தனர். அப்போது அங்குள்ள மர்த்தடியில் கோவில் கதவின் பூட்டு கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் கைரேகைகளை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருடப்பட்ட உண்டியலில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை காணிக்கை இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்ததனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
    • பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பெண்கள் 3 ஆண்கள் என 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பட்டாசு ஆலையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இதனிடையே, பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கூமாபட்டி கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
    • பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும்.

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கூமாபட்டி கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூமாப்பட்டி தொடர்பான வீடியோக்கள் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன
    • கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு பலரும் படையெடுத்து வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

    'மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனி தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்... என்று பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், கூமாபட்டியில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்துள்ளது. கூமாபட்டியில் நிலங்கள் விற்பனைக்கு உள்ளது என்கிற ரீல்ஸ் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

    இந்நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணை பகுதியில் பொதுமக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    சமூக வலைதளங்களின் பிளவக்கல் அணை நீரில் குளிப்பது போன்ற வீடியோ வெளியான நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

    • கூமாப்பட்டி தொடர்பான வீடியோக்கள் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
    • கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு பலரும் படையெடுத்து வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

    'மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனி தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்... என்று பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், கூமாபட்டியில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்துள்ளது. கூமாபட்டியில் நிலங்கள் விற்பனைக்கு உள்ளது என்கிற ரீல்ஸ் எஸ்டேட் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

    இதனிடையே கூமாபட்டியில் வெறிநாய் கடித்து 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவில் அர்ச்சகர்களின் ஆபாச நடன வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
    • உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் ஆபாச நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.

    கோவில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் வீட்டில் மது அருந்து ஆபாச நடனம் ஆடினர்.

    அர்ச்சகர்களின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் தற்காலிக அர்ச்சகர்கள் உட்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பெரிய மாரியம்மன் கோவிலில் பணி நீக்கம் செய்யப்பட்ட 3 பேரும் பூஜையில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய கோவில் அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×