search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Irukkankudi Mariamman Temple"

    • இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர்புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் பல்வேறு வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.

    இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் சாத்தூரிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர்புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜை தொடங்கியது.

    இதன் பின்னர் சின்னமாரியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் இன்று மதியம் 2 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அர்ச்சுனா ஆற்றை கடந்து சந்நதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிக்காக சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்துள்ளனர். கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான (பொறுப்பு) வளர்மதி, பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி விழாவுக்காக 100 சிறப்பு பஸ்களை இயக்க அனைத்துத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சாத்தூர்:

    சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா முன்னேற்பாடு தொடர்பாக கிராம பொதுமக்கள், அனைத்துத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் நடந்தது.

    வருவாய் கோட்டாட்சியர் மங்களமூர்த்தி தலைமை தாங்கினார். சாத்தூர் வட்டாட்சியர் சாந்தி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் கிராமத்தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பக்தர்களின் வசதிக்காக இருக்கன்குடி கோவில் மேட்டில் தற்காலிக பஸ் நிலையம் 3 அமைப்பது, பஸ் நிலையத்தில் குடிநீர் மற்றும் நிழற்குடை அமைப்பது, போக்குவரத்துத்துறை சார்பில் 100 சிறப்பு பஸ்களை இயக்குவது, பொதுப்பணித்துறை சார்பில் நீர்த்தேக்க கரை மீது உள்ள சாலையை சீர்செய்வது, மின்வாரியம் சார்பில் திருவிழா நடைபெறும் 2 தினங்கள் தடையில்லா மின்சாரம் வழங்குவது.

    தீயணைப்புத்துறை சார்பில் இரு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள தீத்தடுப்பு சாதனங்கள் அமைப்பது, 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.


    சாத்தூர் அருகே உள்ள ராமசந்திரபுரத்தில் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய வேன் கவிழ்ந்த விபத்தில் ஆறு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #Virudhunagar #Sattur #IrukkankudiMariammanTemple

    விருதுநகர்:

    சாத்தூர் அருகே உள்ள ராமசந்திரபுரத்தில் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய வேன் கவிழ்ந்த விபத்தில் ஆறு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசணம் செய்வதற்காக ஒரு குழுவினர் வேனில் சென்றனர். கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ராமசந்திரபுரம் அருகே சென்றுகொண்டிருந்த வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Virudhunagar #Sattur #IrukkankudiMariammanTemple
    ×