என் மலர்
விருதுநகர்
- குழந்தையுடன் மகள் மாயமானதால் விரக்தியில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
விருதுநகர்
சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த வர்கள் மாரியப்பன், பஞ்சவர்ணம் தம்பதி. இவர்களது மகள் மகாலட்சுமிக்கு எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணவர் திருப்பூரில் வேலை செய்து வந்ததால் மகாலட்சுமி குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அருகில் வசித்த வீரமுனீஸ்வரன் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியே சென்ற மகா லட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பஞ்ச வர்ணம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17 வயது சிறுமியுடன் கட்டாய திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.
- சிறுமி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஊருக்கு வந்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே யுள்ள எஸ். கொடிக்குளத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு அவரது தாயார் பாண்டி யம்மாள் மற்றும் உறவி னர்கள் சேர்ந்து சிறுமியின் பெற்றோரை மிரட்டி கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
பின்னர் சிறுமியை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி யின் எதிர்ப்பையும் மீறி ஆனந்த் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் ஆனந்த் வெளியே சென்றிருந்த போது, சிறுமி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஊருக்கு வந்துள்ளார். ஆனால் ஆனந்த் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்ததால் திருமங்கலத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்றார்.
அங்கும் அவர்கள் தேடி வந்துள்ள னர். அங்கிருந்து தப்பிய சிறுமி திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியிடம் விசாரித்து போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை கூமாபட்டி போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
அதன் பேரில் கூமாபட்டி போலீசார் ஆனந்த், அவரது தாயார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நரிக்குடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், வாசுகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயலாளர் ராஜசேகரன்,சத்துணவு சங்க கிளை செயலாளர் கோவிந்தன்,துணை தலைவர் அர்ச்சுனன்,மாவட்ட இணை செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில், 2023-24 நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 லட்சம் பசுந்தீவன வளர்ப்பு நிதி இலக்கீட்டில் ஒதுக்கப் பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது.
கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 விழுக்காடு தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படு கிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.
ஆகவே தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் பொருட்டு நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30 சதவீதத்திற்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூன் 20-ந் தேதிக்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கிராம மக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் திருமணம், பெண்கள் மாயம், பாலியல் தொல்லை குற்றங்கள் போன்றவை அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் ஆலோசனையின்பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஏ.முக்குளம் கிராமத்தில் 100 நாள் பணியில் இருந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் நேரில் சென்று விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
- சிவகாசியில் நடந்த ரத்ததான விழாவில் கலெக்டர், எம்.பி. பங்கேற்றனர்.
- பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
விருதுநகர்
உலக குருதி கொடை யாளர் தினத்தை முன்னிட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் குருதி பகுப்பாய்வு மையம் துவக்க விழா மற்றும் குருதி கொடையாளர் தினவிழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
இதில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ரத்த பகுப்பாய்வு உபகரணங் களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் சி.எஸ்.ஆர் நிதியில் வழங்கினர்.
குருதி கொடையாளர் களுக்கு கேடயத்தினை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கி வாழ்த்தி பேசினார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தொழிலதிபர் ஏ.பி.செல்வரா ஜன், சிவகாசி மேயர் இன்பம், ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஆணையா ளர் சங்கரன், விருதுநகர் முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாநகர காங்கிரஸ் தலைவர் சேர்மத்துரை, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் மாரனேரியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப் பட்டது.
- ராஜபாளையத்தில் புதிய சாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
- சாலை தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது.
ராஜபாளையம்
சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்வை ராஜபா ளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது:-
ராஜபாளையம் சொக்கர் கோவில் முதல் நேரு சிலை வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது.
தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டபோதும் தற்போது குண்டும் குழியு மாக காணப்படுகிறது இத னால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே புதிய சிமெண்ட் சாலை அல்லது தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.
அப்போது, அந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை யிடம் உள்ளதால், சிறப்பு கவனம் செலுத்தி சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலா ளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.
- அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நரிக்குடி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடத்துமாறு உத்தரவிட்டார்.
- தீர்மானம் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவராக இருந்தவர் பஞ்சவர்ணம். நரிக்குடி ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 அ.தி.மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர்.
இதில் 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 6 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 12 கவுன்சிலர்கள் ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நரிக்குடி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் பஞ்சவர்ணத்துக்கு எதிராக 12 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்து கையெழுத்திட்டனர்.
இந்த தீர்மானம் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சவர்ணத்திடமும் கலெக்டர் அறிக்கை பெற்றார். அதனை தொடர்ந்து நம்பிக்கை இல்லாத தீர்மான அறிக்கையை தமிழக அரசுக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார்.
அதனை பரிசீலித்த ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்-212 பிரிவின்படி நரிக்குடி ஒன்றிய தலைவர் பஞ்ச வர்ணத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
- விருதுநகரில் அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- நல்ல முறையில் பயிற்சி பெற்று வெற்றியடைய வேண்டும் என்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நூலக அலுவலக கூட்ட ரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒருங்கி ணைந்த ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. இதனை கலெக்டர் ஜெயசீலன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில், இந்த பயிற்சி வகுப்பானது, விருதுநகர் மாவட்ட நூலக அலுவலத்திலும், சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 170 போட்டித்தேர்வு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களை எளிய முறையில் போட்டி தேர்வை எப்படி அனுகுவது, விடா முயற்சி, போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளையும், போட்டி தேர்வு குறித்து அவரது அனுபகங்களுடன் கூடிய ஊக்க உரைகளை வழங்கினர். எனவே தமிழக அரசு வழங்கும் இந்த திட்டத்தினை பயன்படுத்தி, நல்ல முறையில் பயிற்சி பெற்று வெற்றியடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்சினி (தொழில்நெறி வழிகாட்டி), மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வக்கீலை மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
- இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது22). வக்கீலான இவர் சம்பவத்தன்று மேலேந்தல் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி தினேஷின் மோட்டார்சைக்கிள், செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் நாராயணன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் பறிப்பில் ஈடுபட்ட வீரசோழனை சேர்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- திருமணமான 9 மாதத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது.
விருதுநகர்
ராஜபாளையம் அருகேயுள்ள தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது31). தொழிலாளியான இவருக்கும், லட்சுமி என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பால்பாண்டிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடியவு செய்தார். சம்பவத்தன்று இரவு மனைவிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு வீட்டின் தனியறைக்கு சென்ற பால்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே குழந்தைகளுடன் 2 பெண்கள் மாயமானார்கள்.
- சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரியாபட்டி
காரியாபட்டி முருகையாபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் மகேஸ்வரி(வயது38). கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்த மகேஸ்வரி சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகள் மகாலட்சுமி(28). கணவர் திருப்பூரில் வேலை பார்த்து வருவதால் இவர் தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து மகளுடன் வெளியே சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






