17 வயது சிறுமியுடன் கட்டாய திருமணம்

17 வயது சிறுமியுடன் கட்டாய திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.சிறுமி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஊருக்கு வந்துள்ளார்.
17 வயது சிறுமியுடன் கட்டாய திருமணம்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே யுள்ள எஸ். கொடிக்குளத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு அவரது தாயார் பாண்டி யம்மாள் மற்றும் உறவி னர்கள் சேர்ந்து சிறுமியின் பெற்றோரை மிரட்டி கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

பின்னர் சிறுமியை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி யின் எதிர்ப்பையும் மீறி ஆனந்த் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் ஆனந்த் வெளியே சென்றிருந்த போது, சிறுமி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஊருக்கு வந்துள்ளார். ஆனால் ஆனந்த் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்ததால் திருமங்கலத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்றார்.

அங்கும் அவர்கள் தேடி வந்துள்ள னர். அங்கிருந்து தப்பிய சிறுமி திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியிடம் விசாரித்து போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை கூமாபட்டி போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

அதன் பேரில் கூமாபட்டி போலீசார் ஆனந்த், அவரது தாயார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com