வக்கீலை மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது

வக்கீலை மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வக்கீலை மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது22). வக்கீலான இவர் சம்பவத்தன்று மேலேந்தல் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி தினேஷின் மோட்டார்சைக்கிள், செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் நாராயணன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் பறிப்பில் ஈடுபட்ட வீரசோழனை சேர்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com