என் மலர்
விருதுநகர்
- 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் உமாதேவி வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவரும், காவல் ஆணைய உறுப்பினருமான முன்னாள் டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், 'பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து படிப்புகளுக்குமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. வாய்ப்பை பயன்படுத்தி கொண்டவர்கள் அடுத்த கட்டத்திற்கு உயருகின்றனர். வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதே இடத்திலேயே நின்று விடுகின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன், சார்பு ஆய்வாளர் சங்கர நாராயணன், நத்தம்பட்டி சார்பு ஆய்வாளர் பண்டிலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- திருவிழாவில் மோதலில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் எஸ்.ராமலிங்கபுரம், சிவகாமிபுரம் வடக்கு தெரு வடக்கத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சாரதாதேவி(29), அவரது கணவர் ஜெயபிரகாஷ்(35) உள்ளிட்ட பலர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது சிவக்குமார் என்பவர் குடிபோதையில் பெண்கள் நிற்கும் பகுதிக்கு தள்ளாடிக்கொண்டு வந்தார். இதை கண்ட ஜெயபிரகாஷ் பெண்கள் நிற்கும் பகுதிக்கு ஏன் மதுபோதையில் வந்தார்? என கேட்டதற்கு, அவர் மற்றும் அவரது மனைவியை சிவக்குமார் தாக்கியுள்ளார். மேலும் சாரதா தேவியின் சேலையை பிடித்து இழுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சாரதா உறவினர்கள் சிவக்குமாரை தாக்கினர். இதுகுறித்து இருதரப்பினரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெகட்ர் சார்லஸ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- கடையில் அனுமதியின்றி மது விற்பதாக சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சட்டவிரோத மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், 36 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் சுருளி. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அனுமதியின்றி மது விற்பதாக சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கடைக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுருளியின் மனைவி தெய்வத்தாய் மது பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் அவர்களை கையும் களவுமாக பிடித்தார். அப்போது அங்கு வந்த சுருளி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த சுருளி, தெய்வத்தாய் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கணவன்-மனைவியை தேடி வருகின்றனர். இதற்கிடையில் சட்டவிரோத மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், 36 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
- எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கவில்லை.
சிவகாசி
சிவகாசி பகுதியில் நடை பெற்ற பல்வேறு நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள வந்த விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் நிருபர் களிடம் கூறியதாவது:-
2021-ம் ஆண்டு நடை பெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுத் தும் அண்ணாமலையால் வெற்றி பெற முடியவில்லை. அவரை செந்தில்பாலாஜி தோற்கடித்தார். அதன் காரணத்தால் தான் தற்போது செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்.
செந்தில்பாலாஜி கைதுக்கு முழு காரணம் அமித்ஷாவும், அண்ணா மலையும் தான். ஓடிசா விபத்துக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி வைக்கும் பட்சத்தில் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக அண்ணாமலை நீடித்தால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூ னிஸ்டு கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளை எளிதாக கைப்பற்றும்.
மதுரை எய்ம்ஸ் கல்லூரி தொடங்கப்பட்டு விட்டதாகவும், அதில் மாணவர்கள் படித்து வருவதாகவும் அமித்ஷா கூறியது மிகப்பெரிய பொய். நானும், மதுரை எம்.பி. வெங்கடேசும் சேர்ந்து எய்ம்சை தேடினோம் என் பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கவில்லை. இன்னும் டெண்டர் நிலையை கூட எட்டவில்லை என்பது தான் உண்மை. தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என்று அமித்ஷா பேசியதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் வழக்க மாக பேசுவது போல் இதுவும் பொய்யே. பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் 10 மாதங்களில் புதிய அரசு அமைந்தவுடன் தீர்க்கப் படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
பேட்டியின் போது சிவகாசி மாநகர காங்கிரஸ் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர்கள் ரவிசங்கர், கணேசன், நியாஸ், ஷேக் உள்பட பலர் உடனிருந்தனர்.
- தேசிய தரவரிசை பட்டியலில் கலசலிங்கம் பல்கலைகழகத்துக்கு 29-வது இடம் வகிக்கிறது.
- பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களை பாராட்டினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
புதுடெல்லி கல்வி அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான பல்கலை கழகங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகம் 29-வது இடம் பிடித்துள்ளது.
மேலும் கல்வி அமைச்சகத்தின் தகவல்படி தேசிய பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 36-வது இடத்தையும், தேசிய அளவிலான அனைத்து பிரிவு கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் 48-வது இடத்தையும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வேந்தா் ஸ்ரீதரன், இணை வேந்தா் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் சசிஆனந்த், அா்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தா் மற்றும் பதிவாளா் ஆகியோர் டீன்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களை பாராட்டினர்.
- குழந்தையுடன் மகள் மாயமானதால் விரக்தியில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
விருதுநகர்
சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த வர்கள் மாரியப்பன், பஞ்சவர்ணம் தம்பதி. இவர்களது மகள் மகாலட்சுமிக்கு எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணவர் திருப்பூரில் வேலை செய்து வந்ததால் மகாலட்சுமி குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அருகில் வசித்த வீரமுனீஸ்வரன் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியே சென்ற மகா லட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பஞ்ச வர்ணம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17 வயது சிறுமியுடன் கட்டாய திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.
- சிறுமி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஊருக்கு வந்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே யுள்ள எஸ். கொடிக்குளத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு அவரது தாயார் பாண்டி யம்மாள் மற்றும் உறவி னர்கள் சேர்ந்து சிறுமியின் பெற்றோரை மிரட்டி கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
பின்னர் சிறுமியை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி யின் எதிர்ப்பையும் மீறி ஆனந்த் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் ஆனந்த் வெளியே சென்றிருந்த போது, சிறுமி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஊருக்கு வந்துள்ளார். ஆனால் ஆனந்த் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்ததால் திருமங்கலத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்றார்.
அங்கும் அவர்கள் தேடி வந்துள்ள னர். அங்கிருந்து தப்பிய சிறுமி திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியிடம் விசாரித்து போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை கூமாபட்டி போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
அதன் பேரில் கூமாபட்டி போலீசார் ஆனந்த், அவரது தாயார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நரிக்குடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், வாசுகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயலாளர் ராஜசேகரன்,சத்துணவு சங்க கிளை செயலாளர் கோவிந்தன்,துணை தலைவர் அர்ச்சுனன்,மாவட்ட இணை செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில், 2023-24 நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 லட்சம் பசுந்தீவன வளர்ப்பு நிதி இலக்கீட்டில் ஒதுக்கப் பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது.
கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 விழுக்காடு தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படு கிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.
ஆகவே தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் பொருட்டு நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30 சதவீதத்திற்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூன் 20-ந் தேதிக்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கிராம மக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் திருமணம், பெண்கள் மாயம், பாலியல் தொல்லை குற்றங்கள் போன்றவை அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் ஆலோசனையின்பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஏ.முக்குளம் கிராமத்தில் 100 நாள் பணியில் இருந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் நேரில் சென்று விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
- சிவகாசியில் நடந்த ரத்ததான விழாவில் கலெக்டர், எம்.பி. பங்கேற்றனர்.
- பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
விருதுநகர்
உலக குருதி கொடை யாளர் தினத்தை முன்னிட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் குருதி பகுப்பாய்வு மையம் துவக்க விழா மற்றும் குருதி கொடையாளர் தினவிழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
இதில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ரத்த பகுப்பாய்வு உபகரணங் களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் சி.எஸ்.ஆர் நிதியில் வழங்கினர்.
குருதி கொடையாளர் களுக்கு கேடயத்தினை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கி வாழ்த்தி பேசினார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தொழிலதிபர் ஏ.பி.செல்வரா ஜன், சிவகாசி மேயர் இன்பம், ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஆணையா ளர் சங்கரன், விருதுநகர் முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாநகர காங்கிரஸ் தலைவர் சேர்மத்துரை, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் மாரனேரியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப் பட்டது.
- ராஜபாளையத்தில் புதிய சாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
- சாலை தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது.
ராஜபாளையம்
சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்வை ராஜபா ளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது:-
ராஜபாளையம் சொக்கர் கோவில் முதல் நேரு சிலை வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டது.
தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டபோதும் தற்போது குண்டும் குழியு மாக காணப்படுகிறது இத னால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே புதிய சிமெண்ட் சாலை அல்லது தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.
அப்போது, அந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை யிடம் உள்ளதால், சிறப்பு கவனம் செலுத்தி சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலா ளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.






