என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்: கணவன்-மனைவிக்கு வலைவீச்சு
    X

    ராஜபாளையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்: கணவன்-மனைவிக்கு வலைவீச்சு

    • கடையில் அனுமதியின்றி மது விற்பதாக சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சட்டவிரோத மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், 36 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் சுருளி. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அனுமதியின்றி மது விற்பதாக சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த கடைக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுருளியின் மனைவி தெய்வத்தாய் மது பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

    உடனே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் அவர்களை கையும் களவுமாக பிடித்தார். அப்போது அங்கு வந்த சுருளி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த சுருளி, தெய்வத்தாய் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கணவன்-மனைவியை தேடி வருகின்றனர். இதற்கிடையில் சட்டவிரோத மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், 36 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    Next Story
    ×