என் மலர்
நீங்கள் தேடியது "Adolescent suicide"
- வேப்பூர் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டிற்கு தனியாக வந்தார்.
கடலூர்:
வேப்பூர் அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது22). 9ம் வகுப்பு படித்துள்ளார். இவர், கடந்த 4 ஆண்டுகளாக தனது பெற்றோருடன், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டிற்கு தனியாக வந்தார். நேற்று காலை அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, குணசேகரன் வீட்டின் மேற்கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சேட்டு உறவினர் ஒருவரின் கூரை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரை சேர்ந்தவர் சேட்டு (வயது31) டிரைவர். இவர் சம்பவத்தன்று அதே ஊரில் உள்ள உறவினர் ஒருவரின் கூரை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்த சேட்டு தற்காலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த நைனா கார்டு பகுதி சேர்ந்தவர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- விரத்தி அடைந்த அனு ஸ்ரீ இன்று காைல பூச்சி கொல்லி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த நைனா கார்டு பகுதி சேர்ந்தவர் அனுஸ்ரீ (வயது 26). இவருக்கும் நைனா காடு பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த அனுஸ்ரீ பெற்றோர் வீட்டில் குடியிருந்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கவே விரத்தி அடைந்த அனு ஸ்ரீ இன்று காைல பூச்சி கொல்லி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் இரும்பாலை அருகே தந்தை திட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- தந்தை திட்டியதால் மனமுடைந்த விக்னேஷ்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் இரும்பாலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது 20). மர தச்சுவேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.இந்த நிலை யில் விக்னேஷ்குமார் செல வுக்கு பணம் இல்லத்தால் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இதை அறிந்த அவரது
தந்தை ஏழுமலை சத்தம்போட்டுள்ளார். இதனால்
அவர்களுக்குள் வாக்குவாதம்ஏற்பட்டது. இதனால் மன
முடைந்த விக்னேஷ்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவறிந்து வந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திட்டியதால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளிபாளையத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- விசாரணையில் அபிராமியின் செல்போனில் இருந்த தகவல்களை வைத்து அவருடைய மாமனார் சுந்தர் மற்றும் மாமியார் நாகம்மாள் ஆகிய 2 பேர் மீதும் போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் பள்ளிபாளை யம் பெண் தற்கொலை நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன்சாமி (வயது 32). திருப்பூரில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மார்க்கெட் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகள் அபிராமிக்கும் (31) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அபிராமி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து பள்ளிபாளையத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்த அபிராமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் அபிராமியின் செல்போனில் இருந்த தகவல்களை வைத்து அவருடைய மாமனார் சுந்தர் மற்றும் மாமியார் நாகம்மாள் ஆகிய 2 பேர் மீதும் போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் விசாரணை செய்து தலைமறைவான தீபாவை தேடி வருகின்றனர்.
- மதுரையில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
மதுரை கண்ணனேந்தல், ஜி.ஆர். நகரை சேர்ந்த பாண்டியன் மகன் செந்தில்வேல் (வயது 24). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவரது சகோதரர் மதியழகன் மற்றும் நண்பர்கள், "ஏன் இப்படி குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, வாழ்க்கையை சீரழிக்கிறாய்?" என்று கண்டித்தனர்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தில்வேல், சம்பவத்தன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செல்லூர் கே.சாலைப்புதூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி (41). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
எந்த நேரமும் குடித்து விட்டு வேலைக்கு செல்லா மல் ஊர் சுற்றி வந்தாராம். இதை மனைவி தட்டி கேட்டார். வாழ்க்கையில் விரக்தியடைந்த பாண்டி, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (83). இவருக்கு வயிற்று வலி மற்றும் மூட்டு வலி இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த நவநீதகிருஷ்ணன், நேற்று இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- அவனியாபுரத்தில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- பிறந்தநாள் அன்றே வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
அவனியாபுரம்
அவனியாபுரம் செம்பூரணியை சேர்ந்த வேல்முருகனின் மகன் பாண்டித்துரை (வயது30). கட்டிட தொழிலாளி.
நேற்று இவர் தனது பிறந்த நாளையொட்டி மது குடித்தார். போதையில் இருந்த பாண்டித்துரை திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதற்காக உடலில் கத்தியால் கீறினார்.
மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவனியாபுரம் போலீசார் பாண்டித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகாத விரக்தியில் பிறந்தநாள் அன்றே வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் முனீஸ்வரி(வயது25). இவரும் விருதுநகர் அம்மன் கோவில் பட்டியை சேர்ந்த பட்டாசு தொழிலாளி கருப்பசாமி என்பவரும் கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு காத லித்து திரும ணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இ தன் காரணமாக முனீஸ்வரி கலிங்கப்ப ட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் பிரிந்து சென்ற கணவருடன் சேர்ந்து வாழ முனீஸ்வரி விருப்பம் தெரிவித்தார். கருப்பசாமி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
சம்பவத்த ன்று கணவர் வேலை பார்க்கும் பட்டாசு ஆலைக்கு சென்று சேர்ந்து வாழ வேண்டும் என்று முனீ ஸ்வரி கூறியுள்ளார். அதற்கு கருப்பசாமி பெரியோர்கள் முன்னி லையில் பேசிய பின் சேர்ந்து வாழலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு வந்த முனீஸ்வரி வாழ்க்கையில் வெறுப்படைந்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கருப்பையா கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்-கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
- புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை புல்லநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் சிவபெருமாள்(21). கட்டித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலை பார்த்த இடத்தில் உள்ள மோட்டார் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் சூலக்கரை மேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(50). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த கிருஷ்ணசாமி, தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி முருகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை இல்லாததால் விரக்தி அடைந்தார்.
- இதனால் மனவேதனையில் தவித்த அவர், நேற்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல் பெரியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23). கூலி வேலைக்கு சென்று வந்த இவர், மேலும் தொடர்ந்து வேலை இல்லாத தால் விரக்தி அடைந்தார். இத னால் மனவேதனையில் தவித்த அவர், நேற்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டி யன் மற்றும் போலீசார் சம்ப வம் குறித்து விசாரணை நடத்தினர். வேலை இல்லாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
- குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மங்காபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பலமுறை வீட்டை விட்டு வெளியே சென்று 2, 3 நாட்களில் திரும்பி வந்து விடுவாராம்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா மலையின் பின்புறம் உள்ள முனியாண்டி கோயில் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி மாதா ஸ்ரீவில்லி புத்தூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம்
திருமங்கலத்தை அடுத்த மேலஉரப்பனூரை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.
இந்தநிலையில் நேற்று தாய் தமிழ்செல்வியிடம் ேசாடா வாங்கிவரும்படி கூறினார். அவர் கடைக்கு சென்றதும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சிவன் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






