என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
- மதுரையில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
மதுரை கண்ணனேந்தல், ஜி.ஆர். நகரை சேர்ந்த பாண்டியன் மகன் செந்தில்வேல் (வயது 24). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவரது சகோதரர் மதியழகன் மற்றும் நண்பர்கள், "ஏன் இப்படி குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, வாழ்க்கையை சீரழிக்கிறாய்?" என்று கண்டித்தனர்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தில்வேல், சம்பவத்தன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செல்லூர் கே.சாலைப்புதூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி (41). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
எந்த நேரமும் குடித்து விட்டு வேலைக்கு செல்லா மல் ஊர் சுற்றி வந்தாராம். இதை மனைவி தட்டி கேட்டார். வாழ்க்கையில் விரக்தியடைந்த பாண்டி, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (83). இவருக்கு வயிற்று வலி மற்றும் மூட்டு வலி இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த நவநீதகிருஷ்ணன், நேற்று இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.