என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர்- தொழிலாளி தற்கொலை
- விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்-கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
- புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை புல்லநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் சிவபெருமாள்(21). கட்டித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலை பார்த்த இடத்தில் உள்ள மோட்டார் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் சூலக்கரை மேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(50). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த கிருஷ்ணசாமி, தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி முருகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






