என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
- மல்லாங்கிணறு பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மல்லாங்கிணர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நபார்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் மல்லாங்கி ணறு- அயன்ரெட்டி யாபட்டி தார்சாலை பணிகள், ரூ.62.40 லட்சம் மதிப்பில் பலவேலைக்காரர் தெரு முதல் கோவில்பட்டி சாலை வரை தார்ச்சாலை அமைக்கும் பணிகள், அம்ரூத் 2.0 திட்டம் மூலம் ரூ.82.30 லட்சம் மதிப்பில் நடைபெறும் சின்னக்குளம் ஊரணி பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் மல்லாங்கிணர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், கழிவுநீர் மேலாண்மை பணிகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடந்தது. பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூ ராட்சிகள்) சேதுராமன், மல்லாங்கிணர் பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






