என் மலர்
விருதுநகர்
- ரெயில்வே திட்டங்களை மேம்படுத்த வேண்டும்
- அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினர்.
ராஜபாளையம்
ரெயில்வே திட்டங்கள் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் ரெயில்வே அதிகாரிகள், மாவட்ட வருவாய், காவல்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி உச்சநீதிமன்ற வக்கீலும், ராஜபாளையத்தை சேர்ந்தவருமான ராம் சங்கர் ராஜா கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்தார். அதன்படி இரவு நேர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மைசூருக்கு தென்காசி, ராஜபாளையம் வழியாக இயக்க வேண்டும். அதேபோல் இரவு நேர சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து ஈரோட்டிற்கு தென்காசி, ராஜபாளையம், மதுரை, பழனி, கோயம்புத்தூர், திருப்பூர் வழியாக இயக்க வேண்டும்.
எம்.இ.எம்.யு. என்ற சிறப்பு ரெயில் செங்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம், மதுரை, செங்கோட்டை, கொல்லம் வழியாக இயக்க வேண்டும். சிலம்பு விரைவு ரெயிலை தினந்தோறும் இயக்க வேண்டும்.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிக்க ராஜபாளையத்தில் இருந்து காலை நேர ரெயில் இல்லை. எனவே அந்த ரெயிலில் பயணம் செய்வதற்கு ஏதுவாக ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு ரெயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.
ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கரிவலம்வந்தநல்லூர் கிராசிங்கில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய வேண்டும். ராஜபாளை யத்தில் ரெயில்வே சப்-வே அமைக்க வேண்டும். ராஜபாளையத்தில் ரெயில்வே திட்டங்களை மேம்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை ராமசங்கர் ராஜா முன் வைத்தார்.
கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விருதுநகர் அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி செல்லாச்சி (வயது76). இவரும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் 2 பெண்களும் புல்லலக் கோட்டை சாலையில் இன்று காலை நடைபயிற்சி சென்றனர். முனியசாமி கோவில் அருகே சென்ற போது அங்குள்ள பாலத்தில் 2 மர்ம நபர்கள் அமர்ந்திருந்தனர்.
அந்த நபர்கள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்களை நோட்டமிட்டபடி இருந்துள்ளனர். செல்லாச்சி மற்றும் உடன் வந்த பெண்கள் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சென்றுள்ளனர். பாலத்தில் இருந்து இறங்கி செல்லும்போது சற்று இடைவெளி விட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த மர்மநபர்கள் அவர்களின் பின்னால் வந்துள்ளனர்.
திடீரென மர்மநபர்கள் செல்லாச்சி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். செல்லாச்சி மற்றும் உடன் வந்த பெண்கள் கூச்சலிட்டனர். ஆனால் அருகில் யாரும் இல்லாததால் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா, பாண்டியன்நகர் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் மாரிமுத்து, விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- மதுரை அருகே சிறுமி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி முத்துப்பாண்டி (30). இவர்கள் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூ ரணிக்கு வசிப்பதற்காக வந்தனர். இவர்களுக்கு மாரீஸ்வரி(11), என்ற மகளும், ருத்ரபாண்டி என்ற மகனும் உள்ளனர். பாண்டியன் அச்சகத்திலும், மனைவி முத்துபாண்டி அருகில் உள்ள குழாய் நிறுவனத்தி லும் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாரீஸ்வரிக்கு பழைய பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வாங்காததால் பள்ளியில் சேர்க்க முடிய வில்ைல. இதனால் அவர் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மாரீஸ்வரி தூக்கில் தொங்கியபடி கிடந்தாள். அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாய் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது43). இவரது மனைவி தவசெல்வி. இவர்கள் ஏழாயிரம்பண்ணை தெற்கு தெருவில் வசித்து வரு கின்றனர். மகேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மகேந்திரன் அதே பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர், அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தவசெல்வி கொடுத்த புகாரின்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காளியம்மாள் ெதருவை சேர்ந்தவர் அழகர்சாமி(38), ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமண மாகாததால் மன விரக்தியில் இருந்த அவர் குடிப ழக்கத்திற்கு அடிமை யானார். சம்பவத்தன்று வீட்டின் மாடிப்படியில் இருந்து இறங்கி வரும்போது ரத்த வாந்தி எடுத்தார்.
அதை பார்த்த அவரது தந்தை சடையப்பன் அதிர்ச்சியடைந்து விசாரித்தார். அப்போது விஷம் குடித்து விட்டதாக அழகர்சாமி கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மதுரை தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சடையப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓய்வூதியர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் ஆயுள்சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- தொழிலாளர் நல உதவி ஆணையர் அறிவித்தார்.
விருதுநகர்
தொழிலாளர் நல உதவிஆணையர் காளிதாஸ் (சமூக பாதுகாப்பு திட்டம்) கூறியதாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் 60 வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு விருதுநகர் தொழிலாளர் நல உதவி ஆணைய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணைய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுள்சான்று சமர்ப்பிக்கின்றனர். தற்போது ஓய்வூதியர்களின் சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் இணையதளத்தில் ஓய்வூதியர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா நல வாரியங்களில் விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், ஆதார் எண், குடும்ப அட்டை, ஓய்வூதிய ஒப்படைப்பு கணக்குஎண் மற்றும் நேரடி புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணை இல்லாதவர்கள் இணையதளம் முகவரியில் ஓய்வூதியதாரரின் ஓய்வூதிய விண்ணப்ப எண் மற்றும் தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணையினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓய்வூதிய விண்ணப்ப எண் தெரியாத ஓய்வூதிய தாரர்கள் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய இணையதளத்தின் முகப்பில் இருக்கும் விண்ணப்பத்தின் எண்கள் அறிய என்ற வசதியை பயன்படுத்தி பதிவு செய்த தொலைபேசி எண் உள்ளீடு செய்தும் அல்லது பயனாளியின் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்தும் ஓய்வூதிய விண்ணப்ப எண்ணை அறிந்து கொள்ளலாம்.
ஆயுள் சான்று அளித்த ஓய்வூதியர்களுக்கு மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் அனுமதிக்கப்படும் என்பதால் இதுவரை ஆயுள்சான்று சமர்ப்பிக்காத 790 ஓய்வூதியதாரர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக ஆயுள் சான்றினை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேற்படி ஓய்வூதிய தாரிடமிருந்து ஆயுள் சான்றை அலுவலகத்தில் நேரில் பெற இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புகையிலை பொருள், மது விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி மெயின்ேராட்டில் மல்லி போலீசார் ேராந்து சென்றனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். விசாரணையில் அவர் கிருஷ்ணன் கோவில் தெருைவ சேர்ந்த ஜோதிராஜ்(30) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 500 மற்றும் 168 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
சிவகாசி இரட்டை பாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தட்டலைப்பட்டி விலக்கு அருகே 2 வாலி பர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தனர். போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது ரூ.40 ஆயிரம் மதிப்புடைய 19 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது.
மேலும் விசாரணை யில் அவர்கள் தாயில் பட்டி யைச் சேர்ந்த கார்த்தீ ஸ்வரன் (24), வரதராஜ் (27) என்பது தெரிய வந்தது. அவர்களி டமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
- மல்லாங்கிணறு பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மல்லாங்கிணர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நபார்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் மல்லாங்கி ணறு- அயன்ரெட்டி யாபட்டி தார்சாலை பணிகள், ரூ.62.40 லட்சம் மதிப்பில் பலவேலைக்காரர் தெரு முதல் கோவில்பட்டி சாலை வரை தார்ச்சாலை அமைக்கும் பணிகள், அம்ரூத் 2.0 திட்டம் மூலம் ரூ.82.30 லட்சம் மதிப்பில் நடைபெறும் சின்னக்குளம் ஊரணி பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் மல்லாங்கிணர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், கழிவுநீர் மேலாண்மை பணிகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடந்தது. பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூ ராட்சிகள்) சேதுராமன், மல்லாங்கிணர் பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2-வது திருமணம் செய்து வைக்க வற்புறுத்தி தாயை மகன் கத்தியால் குத்தினார்.
- மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே பந்தநேந்தலை சேர்ந்தவர் தவமணி. இவரது மனைவி லட்சுமி(வயது55). இவர்க ளுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவருக்கும் சீதாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருணமாகி 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
2 வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே சீதாலட்சுமி பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் குழந்தைகள் கார்த்திக்கின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் 2-வது திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று தாயிடம் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது பெண் பார்ப்ப தாக தாய் கூறியுள்ளார். ஆனால் உடனடியாக பெண் பார்க்க வேண்டும் என கார்த்திக் வற்புறுத்தி உள்ளார். அப்ேபாது பொறுமையாக இருக்குமாறு தாய் கூறியுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயை குத்தினார்.
அதை பார்த்து தடுக்க வந்த தந்தையையும் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் காயமடைந்த லட்சுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
- புகார் தெரிவிக்க புதிய உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
- பொதுமக்கள் எளிதில் நினைவில் கொள்ள புதிய நம்பர் 15 52 14 என்ற உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தைதொழி லாளர்களை எவ்வித பணிக ளிலும், அபாய கரமான தொழில்களில் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணியமர்த்துவதும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986-ன் படி தண்ட னைக்குரிய குற்றமாகும்.
அவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
குழந்தைகள் இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளிக்கு அனுப்பாமல் தமது குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புச்சட்டம் 1976-ன் படி ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும்.
குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்க மற்றும் புகார் தெரிவிக்க தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் 1800 42 52 650 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கூடுதலாக பொதுமக்கள் எளிதில் நினைவில் கொள்ள புதிய நம்பர் 15 52 14 என்ற உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ஆகவே குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து புகார் தெரிவிக்க மேற்கண்ட உதவி எண்களை பொது மக்கள் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகள், பனை தொழிலாளர்கள் பயன்பெறலாம்.
- tnhorticulture.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்தோ பயன்பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் பனைமரங்கள் வளர்ப்ப தற்கு ஏற்ற மண் வளமும், காலநிலையும் உள்ளது. பனைமரத்தின் பரப்பினை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் தங்கள் வயலின் வரப்புகளிலும், வயல் ஓரங்களிலும் நடவு செய்து பயன்பெறலாம். இதற்காக தமிழ்நாடு பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் தோட்டக் கலை துறை மூலம் 48 ஆயிரம் பனை விதைகளும், 250 பனை கன்றுகளும் முழு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
பனைமரம் வைத்தி ருக்கும் விவசாயிகளில் தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு பனை பொருட்கள் தயாரிக்கும் கூடாரம் அமைப்பதற்காக 50 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
பனைமரம் ஏறுவதற்கான உரிமம் வைத்துள்ள பனை தொழிலாளர்களுக்கு பனைமரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்கள் 75 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு ரூ.4 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட உள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த தொழிலாளர்கள், இத்திட்டத்தில் பயன்பெற அருகில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ, உழவன் செயலி, tnhorticulture.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்தோ பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் உரங்கள்- இடுபொருட்கள் வழங்கப்படும்.
- வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருச்சுழி
நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு மின்விசை தெளிப்பான், தார்பாய் உள்பட 5 வகையான விவசாய பண்ணை கருவி கள் அடங்கிய தொகுப்பு மானிய விலை யில் வழங்கப்பட உள்ளது.
மேலும் நரிக்குடி வட்டார விவசாயிகளுக்கு நெல் மற்றும் நிலக்கடலை விதைகள், ஜிப்சம், உயிர் உரங்களான ஜிங்க் சல்பேட் உரங்கள் ஆகியவையும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.ஆகவே நரிக்குடி வட்டார விவசாயிகள் அனைவரும் தங்களது ஆதார் கார்டு நகல், பட்டா நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொடுத்து உரங்கள், பண்ணைக் கருவிகளை வாங்கி பயன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கு எம்.பி. விருது வழங்கினார்.
- அரசு புதிய மருத்துவமனையில் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆய்வு செய்தார்.
விருதுநகர்
சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சாத்தூர் பெரியார் நகரில் அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற சாத்தூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
அதை தொடர்ந்து சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு புதிய மருத்துவமனையில் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆய்வு செய்தார். உடன் சாத்தூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் தலைவர் நிர்மலா, சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன், வட்டார காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம், சின்னக்காமன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை(31), ஒர்்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்தது. இதனை கைவிட முடியாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பற்றிவிட்டனர். இந்த நிலையில் நேற்று மனைவி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீடு பூட்டி இருந்தது. தட்டிப்பார்த்தும் திறக்காததால் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது சேலையில் தூக்குப்போட்டு இருந்தார். அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அண்ணாதுரையின் உறவினர் கலைச்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் தளவாய்புரம்
சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






