கள் விற்ற தந்தை-மகன் கைது

கள் விற்ற தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். 2 பேர் பிளாஸ்டிக் பாட்டில்களில் பதநீர் விற்றுக் கொண்டிருந்தனர்.
கள் விற்ற தந்தை-மகன் கைது
Published on

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் கள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அன்னையர் தோப்பு பண்ணை அருகே 2 பேர் பிளாஸ்டிக் பாட்டில்களில் பதநீர் விற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அந்த பாட்டில்க ளை சோதனை செய்த போது அது கள் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள்

மீனாட்சி தோட்ட தெருவை சேர்ந்த அர்ஜு னன் (வயது 56) மற்றும் அவரது மகன் செல்வகுமார் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப் பட்டிருந்த 80½ லிட்டர் கள்ளை அழித்த போலீசார் தந்தை, மகனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com