என் மலர்
விருதுநகர்
- மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது.
- நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ244.20 லட்சம் மதிப்பில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைைம தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் தமிழ கத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதி லும், விரைவாகவும் சென்ற டைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல் படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பல்வேறு மேம் பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல் படுத்தி வருகிறது. அதுமட்டு மல்லாமல் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதி திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார், சாத்தூர் கோட்டாட் சியர் சிவக்குமார், செயற்பொறியாளர் செல்வராஜன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- போதைப்பொருள் விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.
- உதவி தலைமையாசிரியர் இளையபெருமாள் நன்றி கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இயங்கிவரும் போதைத் தடுப்பு மன்றத்தின் சார்பில், குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, போதைத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் ராஜபாளையம் அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
போதைப்பொருள் விழிப்புணர்வுக் கூட்டம்
சிக்கலான சூழ்நிலைகளில் மாணவிகள் உடனடியாக, 1098, 181, 100, 155260 என்ற புகார் எண்களில் தொடர்புகொண்டு உதவி கேட்பதும் குறித்தும் எடுத்துரைத்தார். கூட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, காவலர் சங்கரேசுவரி ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் இளையபெருமாள் நன்றி கூறினார்.
- பா.ஜ.க.அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- மாவட்ட இளைஞரணி தலைவர் வீரசோழன் சிவபாலன் செய்திருந்தார்.
திருச்சுழி
பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருச்சுழி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி, விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பி னர் கஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டி வழிமு றைகள், பிரசார முறைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் பேசினார். இதில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் பல்வேறு அணிகள் பிரிவு களின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடு களை விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் வீரசோழன் சிவபாலன் செய்திருந்தார்.
- கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
- அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கல்லூரணி பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருச்சுழி துைண போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு திருச்சுழி அருகே உள்ள மாங்குளம் பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூனன் என்பவ ரின் மனைவி தாடக நாச்சி யார் (வயது 36) என்பவர் நின்று கொண்டிருந்தார்.அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்ததால், சந்தேகத்தின்பேரில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறி முதல் செய்தனர். மாண வர்கள் மற்றும் இளைஞர்க ளுக்கு விற்பதற்காக கஞ்சா பொட்டலங்களை அவர் வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.
இதையடுத்து தாடக நாச்சியாரை போலீசார் கைது செய்தனர். இவர் கல்லூரணி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழக்குடி கிராமத்தில் உள்ள தூய அமல உற்பவி அன்னை மாதா கோவில் திருவிழா நடந்து வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் தொடங்கியது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான பந்தய போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.
இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயமானது கீழ்க்குடி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது. இதில் 9 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 19 ஜோடி சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் கலந்து கொண்டனர்.
கோவில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற இந்த ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கும், சாரதி களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தினை பொதுமக்கள் ஏராள மானோர் கண்டு களித்தனர். திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலை மையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- திருச்சுழி அருகே புகையிலை பொருள் பதுக்கி விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
- கோர்்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சித்தலக்குண்டு பகுதியில் உள்ள மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள மளிகைக்கடையில் கணேஷ் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 20 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் மளிகை கடை உரிமையாளர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த முருகேசனை(42) கைது செய்தனர். பின்னர் அவர் கோர்்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- வேளாண் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.
- இயக்குநர் சுந்தரவள்ளி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன டைந்து வரும் பயனாளி களின் இருப்பிடத்திற்கு சென்று கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி வடபட்டி கிராமத்தில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் மகாகனி மரக்கன்றுகள் பெற்று வளர்த்து வருவதையும், புதுக்கோட்டை ஊராட்சியில் உள்ள கம்பு விதை பண்ணையினையும், புதுக்கோட்டை கிராமத்தில் உணவு மற்றும் சத்து தானியங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுழற் கலப்பை மூலம் பயன்பெற்று வருவதையும் பார்வையிட்டார்.
பின்னர் செவலூர் கிராமத்தில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் நடவு செய்யப்பட்ட தேக்கு மரக்கன்றுகளையும், செவலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சி துறை பண்ணை யும், நடையனேரி கிரா மத்தில் கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 100 ஏக்கர் கோவில்பட்டி-4 ரக சோளம் பயிரிடப்பட்டுள்ள (கே4 ரகம்) வயலினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவசாயி களுடன் கலந்துரையாடி, பயிர் வளர்ப்பு முறைகள், அரசின் மூலம் வழங்கப்படும் உதவிகள், மகசூல் உள்ளிட்ட வைகள் குறித்து கேட்ட றிந்தார்.
மேலும் பண்ணைக் கருவிகள், இதர பொருட்க ளான உளுந்து, நிலக்கடலை மினி கிட் மற்றும் பேட்டரி தெளிப்பான்களையும் கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சுமதி, சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரவள்ளி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள எம்.ராமசந்திராபுரம் பகுதியில் ஆமத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் மரத்தடியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. அங்கிருந்து சரவெடி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி விசாலாட்சி நகரை சேர்ந்த பரணிதரன்(வயது34), விஜயகுமார்(21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஆலை உரிமையாளர் சோலையம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர், கன்னிசேரி நாரணாபுரம் ரோட்டில் வாடியூர் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு உள்ள செட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதும் தெரியவந்தது. அங்கிருந்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த வச்சகாரப்பட்டி போலீசார் வாடியூரை சேர்ந்த கருப்பசாமி(36), கீழ திருத்தங்கல் கருப்பசாமி(48), ஓ.கோவில்பட்டி தர்மர்(33) ஆகியோரை கைது செய்தனர்.
- கூர்நோக்கு இல்ல சிறுவன்-கல்லூரி மாயமானார்கள்.
- ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மல்லி புதூரில் சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருக்கும் சிறுவன் மாடியில் காய வைக்கப்பட்ட துணிகளை எடுத்து வருவதாக கூறி சென்றார். பின்னர் அவனை காணவில்லை. எங்கு சென்றார்? என தெரியவில்லை.
இதுகுறித்து கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் திலகவதி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகள் காயத்ரி(19). விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தோழியுடன் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்ைல. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து மாணவியின் தாய் இதயகனி கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை நெசவாளர்காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜனனி(28). குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கணவர் ராஜ்குமார் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருடச்சென்ற வீட்டில் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் விட்டு சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் சூலக்கரை மேடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முருகன்(வயது57). இவரது மனைவி புஷ்பம். இவர்கள் ஊருக்கு வரும் மகனை அழைத்து வருவதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தனர். அப்போது மர்மநபர்கள் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முருகன் குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். இவர்கள் வருவதை கண்ட மர்மநபர்கள் பின்கதவு வழியாக தப்பி சென்றனர்.
அப்போது அவர்கள் பை ஒன்றை விட்டு சென்றனர். அதில் வெள்ளியிலான விநாயகர் சிலை, கரண்டிகள், கிண்ணங்கள், காமாட்சி விளக்கு, தட்டுகள், உடைந்த தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவைகளை சூலக்கரை போலீஸ் நிலையத்தில் முருகன் ஒப்படைத்தார். மேலும் தனது வீட்டில் மர்மநபர்கள் திருட முயற்சி செய்தது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய கும்பல் பிடிபட்டது.
- பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக ேதாப்பு ராம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ேபாலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு 3 பெண்கள் மற்றும் வாலிபர் ஒருவர் இருந்தார்.
அவர்களில் ஒருவர் விபசார அழகி என்பதும் மற்ற 3 பேரும் புரோக்கர்கள் என்பதும் தெரியவந்தது. புரோக்கர்களாக செயல் பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த கற்பகம்(வயது 33), ராஜபாளையம் திருவள்ளு வர் நகரை சேர்ந்த ரெஜினா பீவி என்கிற பாத்திமா (44), ராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலையை சேர்ந்த செந்தூரான் (36) ஆகியோர் செயல்பட்டுள்ள னர்.
அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து இளம் பெண்ணை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் தெருவை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை மீட்டனர்.
அவரை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண்ணை காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
- மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
- உரிமையாளர்-டிரைவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி மற்றும் போலீசார் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழி யாக வந்த டிராக்டரை நிறுத்துமாறு சைகை காண் பித்தனர்.
டிராக்டரை ஓட்டி வந்த நபர், போலீசாரை பார்த்த தும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த டிராக்டரை சோதனை செய்தபோது, அதில் வண்டல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். டிராக்டரை ஓட்டி வந்த மாரியப்பன் மற்றும் உரிமை யாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.






