என் மலர்
நீங்கள் தேடியது "அரசு நிதி"
- இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்று கொள்ளலாம்.
- www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட பக்தர்கள் கட்டணமில்லா பயணமாக ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் கோவில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மேலும் மானசரோவர் மற்றும் முக்திநாத் போன்ற புனித தலங்களுக்கு ஆன்மீக பயணம் சென்று வருபவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியமும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்மிகப் பயணங்களின் மூலம் இதுவரை 7,998 பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர்.
அந்தவகையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலிருந்து காசி விஸ்வநாதசாமி கோவிலுக்கு இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து மண்டலத்திற்கு 30 பக்தர்கள் வீதம் 600 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் அக்டோபர் 22-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது.
- நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ244.20 லட்சம் மதிப்பில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைைம தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் தமிழ கத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதி லும், விரைவாகவும் சென்ற டைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல் படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பல்வேறு மேம் பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல் படுத்தி வருகிறது. அதுமட்டு மல்லாமல் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதி திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார், சாத்தூர் கோட்டாட் சியர் சிவக்குமார், செயற்பொறியாளர் செல்வராஜன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சம் நிதியுதவி
- 15முதல் 20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சமும் 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சம் வரை நிதியுதவி
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
குமரி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் ஏற்பட்டு உள்ள பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தேவாலயங்களில் ஏற்பட்டு உள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15 முதல் 20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சமும் 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை-III) அளிக்க வேண்டும்.
சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை அதிலுள்ள பிற்சேர்க்கை-II & III-ல் உள்ளவாறு பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவின ரால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவரால் பரிந்துரை செய்யப்படும்.
நிதி உதவி இரு தவணை களாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
எனவே மாவட்டத்தில் தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பம் செய்திடலாம்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- தனியாருக்கு குத்தகைக்கு விட்டு மோட்டார் பம்ப் பராமரிக்கப்பட்டதாக போலி ரசீது மூலம் நிதி கையாளப்பட்டுள்ளது.
- கூட்டு சதி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரிப்பு, அரசு நிதியை தவறாக பயன்படுத்துதல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி அரசு பணத்தை சொந்த பயன்பாட்டிற்கு மாற்றுதல் ஆகிய பிரிவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் நங்க வள்ளி டவுன் பஞ்சாயத்தில் 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை குடிநீர் மோட்டார் பம்ப் , குழாய் உள்ளிட்ட பொருட்கள் 8 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.
போலி ரசீது
இதில் அரசின் வழிகாட்டுதல் மீறப்பட்டு தனியாருக்கு குத்தகைக்கு விட்டு மோட்டார் பம்ப் பராமரிக்கப்பட்டதாக போலி ரசீது மூலம் நிதி கையாளப்பட்டுள்ளது. அப்போதைய சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்தார்.
அதன்படி லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கந்தசாமி சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு மேல் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இது குறித்து விசாரித்தார்.
4 பேர் மீது வழக்கு
இதையடுத்து அப்போதைய நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக பணியாற்றிய மேகாநாதன், உதவி பொறியாளர்கள் மணி மாறன், செல்வராஜ், மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் மீது கூட்டு சதி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரிப்பு, அரசு நிதியை தவறாக பயன்படுத்துதல் , அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி அரசு பணத்தை சொந்த பயன்பாட்டிற்கு மாற்றுதல் ஆகிய பிரிவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.






