மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அரசு நிதி

மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு கலந்து கொண்டனர்.
புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு கலந்து கொண்டனர்.
Published on

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ244.20 லட்சம் மதிப்பில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைைம தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் தமிழ கத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதி லும், விரைவாகவும் சென்ற டைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல் படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பல்வேறு மேம் பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல் படுத்தி வருகிறது. அதுமட்டு மல்லாமல் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதி திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார், சாத்தூர் கோட்டாட் சியர் சிவக்குமார், செயற்பொறியாளர் செல்வராஜன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com