என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரூ.1.50 கோடி அரசு நிதியில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு கட்டணமில்லா ஆன்மீக பயணம்
    X

    ரூ.1.50 கோடி அரசு நிதியில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு கட்டணமில்லா ஆன்மீக பயணம்

    • இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்று கொள்ளலாம்.
    • www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட பக்தர்கள் கட்டணமில்லா பயணமாக ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் கோவில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மேலும் மானசரோவர் மற்றும் முக்திநாத் போன்ற புனித தலங்களுக்கு ஆன்மீக பயணம் சென்று வருபவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியமும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்மிகப் பயணங்களின் மூலம் இதுவரை 7,998 பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர்.

    அந்தவகையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலிருந்து காசி விஸ்வநாதசாமி கோவிலுக்கு இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து மண்டலத்திற்கு 30 பக்தர்கள் வீதம் 600 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் அக்டோபர் 22-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×