அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்யப்பட்டது.
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது
Published on

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள எம்.ராமசந்திராபுரம் பகுதியில் ஆமத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் மரத்தடியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. அங்கிருந்து சரவெடி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி விசாலாட்சி நகரை சேர்ந்த பரணிதரன்(வயது34), விஜயகுமார்(21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஆலை உரிமையாளர் சோலையம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர், கன்னிசேரி நாரணாபுரம் ரோட்டில் வாடியூர் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு உள்ள செட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதும் தெரியவந்தது. அங்கிருந்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த வச்சகாரப்பட்டி போலீசார் வாடியூரை சேர்ந்த கருப்பசாமி(36), கீழ திருத்தங்கல் கருப்பசாமி(48), ஓ.கோவில்பட்டி தர்மர்(33) ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com