சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பா.ஜ.க.அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் வீரசோழன் சிவபாலன் செய்திருந்தார்.
பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
Published on

திருச்சுழி

பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருச்சுழி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி, விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பி னர் கஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டி வழிமு றைகள், பிரசார முறைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் பேசினார். இதில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் பல்வேறு அணிகள் பிரிவு களின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடு களை விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் வீரசோழன் சிவபாலன் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com