என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய கும்பல்
    X

    வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய கும்பல்

    • வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய கும்பல் பிடிபட்டது.
    • பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக ேதாப்பு ராம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ேபாலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு 3 பெண்கள் மற்றும் வாலிபர் ஒருவர் இருந்தார்.

    அவர்களில் ஒருவர் விபசார அழகி என்பதும் மற்ற 3 பேரும் புரோக்கர்கள் என்பதும் தெரியவந்தது. புரோக்கர்களாக செயல் பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த கற்பகம்(வயது 33), ராஜபாளையம் திருவள்ளு வர் நகரை சேர்ந்த ரெஜினா பீவி என்கிற பாத்திமா (44), ராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலையை சேர்ந்த செந்தூரான் (36) ஆகியோர் செயல்பட்டுள்ள னர்.

    அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து இளம் பெண்ணை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் தெருவை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை மீட்டனர்.

    அவரை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண்ணை காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    Next Story
    ×