என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானிய விலையில் உரங்கள்- இடுபொருட்கள்
    X

    மானிய விலையில் உரங்கள்- இடுபொருட்கள்

    • விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் உரங்கள்- இடுபொருட்கள் வழங்கப்படும்.
    • வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    திருச்சுழி

    நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு மின்விசை தெளிப்பான், தார்பாய் உள்பட 5 வகையான விவசாய பண்ணை கருவி கள் அடங்கிய தொகுப்பு மானிய விலை யில் வழங்கப்பட உள்ளது.

    மேலும் நரிக்குடி வட்டார விவசாயிகளுக்கு நெல் மற்றும் நிலக்கடலை விதைகள், ஜிப்சம், உயிர் உரங்களான ஜிங்க் சல்பேட் உரங்கள் ஆகியவையும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.ஆகவே நரிக்குடி வட்டார விவசாயிகள் அனைவரும் தங்களது ஆதார் கார்டு நகல், பட்டா நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொடுத்து உரங்கள், பண்ணைக் கருவிகளை வாங்கி பயன் பெறலாம்.

    மேலும் விபரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×