குழந்தையுடன் மகள் மாயமானதால் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

குழந்தையுடன் மகள் மாயமானதால் விரக்தியில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
குழந்தையுடன் மகள் மாயமானதால் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

விருதுநகர்

சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த வர்கள் மாரியப்பன், பஞ்சவர்ணம் தம்பதி. இவர்களது மகள் மகாலட்சுமிக்கு எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கணவர் திருப்பூரில் வேலை செய்து வந்ததால் மகாலட்சுமி குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அருகில் வசித்த வீரமுனீஸ்வரன் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியே சென்ற மகா லட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பஞ்ச வர்ணம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com