search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் ஊராட்சி குழு கூட்டம்
    X

    வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமையில் கூட்டம் நடந்த காட்சி.

    வேலூர் ஊராட்சி குழு கூட்டம்

    • 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமையில் இன்று நடந்தது. துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஊராட்சி செயலர் சாந்தி, சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    குடியாத்தம் ஒன்றியம் டி.பி. பாளையம் ஊராட்சி ரங்க சமுத்திரம் ராமகிருஷ்ணா பள்ளி தெருவில் ரூ.5 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்க அனுமதி வழங்குவது, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் ஊனை வாணியம்பாடி பைரவர் கோவில் அருகில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் ரூ.3 லட்சத்தில் பணிகள் தொடங்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி குழு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அறை நுழைவாயில் ஆகியவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கியும், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலகத்திற்கு ரூ.7 லட்சத்தில் கழிவறை அமைக்கவும் அனுமதி வழங்குவது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×