search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பணியின்போது மரங்களை வெட்டாமல் மாற்று இடத்தில் வளர்க்க வேண்டும்: திருச்சி கலெக்டர் அறிவுரை
    X

    சாலை பணியின்போது மரங்களை வெட்டாமல் மாற்று இடத்தில் வளர்க்க வேண்டும்: திருச்சி கலெக்டர் அறிவுரை

    • சாலை பணிகளின் போது மரங்களை அழிக்க கூடாது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்
    • திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் கதர் ஆடைகளை உடுத்தி காந்திஜியை நினைவுகளை போற்ற வேண்டும் என கலெக்டர் பிரதீப்குமார் வேண்டுகோள்

    திருச்சி:

    காந்தி ஜெயந்தி முன்னிட்டு திருச்சி ெரயில் நிலையம் எதிரே உள்ள காதி கிராப்ட் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கப்பட்டது. இதனை கலெக்டர் மா.பிரதீப் குமார், மேயர் மு.அன்பழகன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறும்போது, மகாத்மா காந்திஜியின் 154-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கதரின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், காந்திஜியின் நினைவுகளை மக்கள் நினைவு கூர வேண்டும் என்பதற்காகவும் இன்று இந்த கதர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

    ரூ.70 லட்சம் வரை தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் கதர் ஆடைகளை உடுத்தி காந்திஜியை நினைவுகளை போற்ற வேண்டும்.

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை பணிகளின் போது சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டாமல் அதனை மாற்று இடங்களில் வளர்க்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மரங்களை வெட்டாமல் அதனை மாற்று இடத்துக்கு கொண்டு செல்லும் தொழில்நுட்பம் உள்ளது. ஆகவே திருச்சி மாவட்டத்தில் கூடியவரை நெடுஞ்சாலைத்துறை பணியின்போது மரங்களை வெட்டாமல் வேறு இடத்தில் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×