search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வூதியம் பெறுபவர்கள் நேர்காணல் பணியை விரைந்து முடிக்க கருவூல அலுவலர் வேண்டுகோள்
    X

    ஓய்வூதியம் பெறுபவர்கள் நேர்காணல் பணியை விரைந்து முடிக்க கருவூல அலுவலர் வேண்டுகோள்

    • ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் சேலம் மாவட்ட கருவூல அலகில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • வருகின்ற 15-ந் தேதிக்குள் நேர்காணல் பணியை விரைந்து முடித்துவிட வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கருவூல அலுவலர் யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் அறிவிப்பாணைப்படி, 2022-ம் ஆண்டிற்கான ஓய்வூதி யதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் சேலம் மாவட்ட கருவூல அலகில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது 2 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் நேர்காணலில் 65 சதவீத ஓய்வூதியதாரர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.மீதமுள்ள ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வருகின்ற 15-ந் தேதிக்குள் நேர்காணல் பணியை விரைந்து முடித்துவிட வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நேர்காணல் முடிக்காத ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் நவம்பர் மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.எனவே சேலம் மாவட்ட கருவூல அலகில் (மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில்) ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் நேர்காணல் பணியை விரைந்து முடித்திட வேண்டும். இதன்மூலம் ஓய்வூதியம் நிறுத்தப்படுதல் போன்ற அசவுகரியங்களை தவிர்க்குமாறும், நேர்காணல் பணியை முடித்திட ஒத்துழைக்கு மாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×