search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நகராட்சி வணிக வளாகத்தை மீண்டும் மறு ஏலம் விட வேண்டும்கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    X

    உடுமலை நகராட்சி கூட்டம் தலைவர் மத்தீன் தலைமையில் நடைபெற்ற காட்சி. 

    உடுமலை நகராட்சி வணிக வளாகத்தை மீண்டும் மறு ஏலம் விட வேண்டும்கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    • உடுமலை நகராட்சியில் 13 -வது நகர்மன்ற கூட்டம் அலுவலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • குத்தகை தொகையை செலுத்தி நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் 13 -வது நகர்மன்ற கூட்டம் அலுவலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் திருக்குறளும் வாசிக்க ப்பட்டது.அதைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் மத்தீன் உரையா ற்றினார். அதைத் தொடர்ந்து கடந்த கூட்டத்தின் போது ஒத்திவைக்கப்பட்ட மன்ற கூட்ட பொருள்கள் ஒன்று முதல் 87 வரையிலும் மேலும் 88 முதல் 108 வரையிலும் உள்ள பொரு ள்கள் விவாதத்திற்கு வைக்க ப்பட்டது.அதைத் தொடர்ந்து விவாதம் தொடங்கியது .அப்போது நகர் மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:- நகராட்சி வணிக வளாகம் ஏலம் வெளிப்படையாக விடப்படவில்லை என்றும் ஏலத்தை நிறுத்தி வைத்து நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் கொடுத்து மீண்டும் மறுஏலம் விட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க ப்பட்டது. இதையடுத்து நகராட்சி தினசரி சந்தையில் நடைபெற்று வரும் கடைகள் கட்டுமான பணி தாமதமாக நடைபெறுவதால் பொதுமக்கள்- விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகளை விரைவு படுத்த வேண்டும். வெளி ஆட்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தில் பி.எப் பிடிக்க வேண்டும். உடுமலை நகராட்சிக்கு சொந்தமான நகர் அலுவலர் குடியிருப்பு பராமரிப்பு பணியை ஆய்வு செய்ய வேண்டும்.நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் பிரிவு வாகனச் செலவினங்கள், 9-வது வார்டு நாராயணன் காலனியில் பொது சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேசினர். அதைத் தொடர்ந்து பரபரப்புடன் பேசப்பட்டு வந்த நகராட்சி வாரச்சந்தையின் ஏலம் தொடர்பான 86 வது தீர்மானத்தை நகரச் செயலாளர் வேலுச்சாமி, ஜெயக்குமார், ஆறுச்சாமி, துணை தலைவர் கலை ராஜன் ஆகியோர் முன்வை த்து பேசினர். அப்போது நகராட்சி சந்தையின் குத்தகை கடந்த நிதியாண்டுடன் முடிவடைந்து விட்டது.கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அதே குத்தகை தொகையை செலுத்தி நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். அல்லது அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர்மேற்படி விவாதம் தொடர்பாக நகராட்சிநிர்வாக ஆணையர் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டு அனுமதி பெற்று நகராட்சி நிர்வாக ஆணையர் தெரிவிக்கும் நிபந்தனைகளுக்குட்பட்டு ஏலம் விடப்படும் என்றும், இதனால் ஒப்பந்ததாரர் வைத்தகோரிக்கை நிராகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.இதன் காரணமாக பரபரப்பாக பேசப்பட்ட சந்தை ஏலம் தொடர்பான விவாதம் முடிவுக்குவந்தது. இதில்வின்சென்ட் ஜோசப்,ஷாஜாதீ பர்வீன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் ,அலுவலக அதிகாரிகள் ,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×