search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றில் கழிவுநீரை விடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை
    X

    ஆற்றில் கழிவுநீரை விடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

    • கலெக்டர் எச்சரிக்கை
    • விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் கிடைக்க ஏற்பாடு

    திருப்பத்தூர்:

    ஆற்றில் கழிவுநீரை விடும் தொழிற்சாலை கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார்.

    வேளாண் இணை இயக்குநர் கி.ராஜசேகர் முன்னிலை வகித்தார். துணை இயக்குநர்கள் பச்சையப்பன், பாத்திமா, வேளாண் அறி வியல் நிலைய விஞ்ஞானி (கிருஷ்ணகிரி) குணசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    ஆம்பூர், வாணியம்பாடி பாலாற்றுப் பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலையினர் மழைக்காலங்களில் கழிவுநீரை ஆற்றில் விடு கின்றனர். இதனால் விவசாயமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படு கிறது. 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

    இதனால் விவசாயம் அழிந்து விடும் நிலைக்கு உள்ளது. எனவே 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக விவ சாயிகள் சார்பில், 50 சதவீத கூலியும், அரசு 50 சதவீத கூலியும் வழங்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்தைக் காக்க முடியும். ஜலகாம் பாறைக்குச் செல்லும் வழியில் 2 கி.மீ. தூரத்துக்குள் 14 வேகத்தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். ஆடி பட்டத்துக்கு விவ சாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள் கிடைக்கவும், யூரியா உரம் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    அதைத்தொடர்ந்து, கலெக்டர் அமர் குஷ்வாஹா பேசியதாவது:-

    ஆற்றில் கழிவுநீரை விடும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும். மழைக்காலங்களில் தோல் தொழிற்சாலை கள் கூடுதலாக கண்காணிக்கப்படும். 100 நாள் தொழிலாளர்களை விவசாயத்துக்குப் பயன்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்கலாம். விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் படும் என்றார்.

    Next Story
    ×