search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
    X

    ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

    • ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள்
    • 7 கிலோ பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்திய ஒரிசா மாநில 2 வாலிபர்கள் ரெயில்வே போலீசார் கைது செய்து 7 கிலோ கஞ்சாவை இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா என்பது குறித்து சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அடங்கிய தனிப்படையினர் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 1 வது பிளாட்பாரத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் சோதனை செய்தபோது சீட்டு எண் 4 ல் அமர்ந்து இருந்த சந்தேகத்தின் பேரில் 2 வாலிபரின் உடமைகளை சோதனை செய்யும் போது கள்ளத்தனமாக கருப்பு கலர் பையில் 7 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரிய வந்தது

    மேலும் கஞ்சா கடத்திய வாலிபர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் பலாஸ்கீர் ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பூர் வரை பயணம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ரெயில்வே போலீசார் இவரை ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒரிசா மாநிலம், பெல்பாரா கடம்படா பகுதியை சேர்ந்த ஷ்யாம் சிங் என்பவரின் மகன் சுஜித் நாக் (வயது 29) மற்றொருவர் கசல்பூர் பகுதியைச் சேர்ந்த புராணசந்திர பகா என்பவரின் மகன் பிபேகானந்தா பகா (வயது 31) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஜோலார்பேட்டை ரெயில் போலீசார் அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    இதனை அடுத்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஒரிசா மாநில 2 வாலிபர்கள் சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சாவின் மதிப்பு 70 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×