search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
    X

    ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்தியதாக கர்நாடக மாநில வாலிபர்கள் 2 பேர் கைது.

    ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

    • 34 கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாகர்கோவில் ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலிஷ் சிறப்பு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் தலைமையில் அண்ணாதுரை, மாரிசெல்வன், உள்ளிட்ட ரெயில்வே போலீசார் இன்று அதிகாலை ஆந்திரா மாநிலம் சித்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் வரை செல்லும் ஓடும் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து வந்த ஆட்டியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை ஓடும் ரெயிலில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயிலின் முன் பதிவு செய்யப்பட்ட எஸ் 3 பெட்டியில் சோதனை செய்த போது கழிவறையின் அருகே ஓரமாக பயணம் செய்தவரின் நீல நிற 1 பேக், மற்றும் சிகப்பு நிற பேக் 2 ஆகிய 3 பேக்கை சோதனை செய்தனர். அதில் 3 பண்டல்களில் சுமார் 34 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்தியதாக பயணம் செய்தவர்களிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டதில் கர்நாடக மாநில பெங்களூர் வித்யாரன்னியபுரா பகுதியைச் சேர்ந்த ராயப்பன் மகன் செந்து (வயது 22), மற்றும் பெங்களூர் மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் சித்தாராஜ் இவரது மகன் மனோஜ் (வயது 25) என தெரிய வந்தது.

    இதனையடுத்து நாகர்கோவில் ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை பிடித்து மேல் நடவடிக்கைக்காக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்படைத்தனர்.

    பின்னர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தியதாக செந்து உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×