என் மலர்
தஞ்சாவூர்
- பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
- கருகும் பயிர்களை பாதுகாக்க கர்நாடகம் காவிரி நீரை திறந்து விட வேண்டும்.
பூதலூர்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட 24-வது மாநாடு செங்கிப்பட்டியில் கலிய பெருமாள், முத்துக்கண்ணு ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக அரங்கத்தின் வெளியே கடைத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த சங்க கொடியினை வீரப்பன் ஏற்றி வைத்தார்.
மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாநில பொதுச்செ யலாளர் மாசிலாமணி,தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாள சக்திவேல், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலெட்சுமி, நிர்வாகிகள் சேவையா, திருநாவுக்கரசு, பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சிசெயலாளர் முகில் உள்ளிட்டோர் பேசினர்.
சங்கத்தின் மாவட்ட பொறுப்பு செயலாளர்.பாஸ்கர் வேலை அறிக்கை, வரவு செலவு அறிக்கை முன்வைத்து பேசினார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் மாவட்ட தலைவராக ராமச்சந்திரன், செயலாளராக பாஸ்கர், பொருளாளராக சவுந்தர ராசன் உள்ளிட்ட 27 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் நடப்பாண்டு பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை பாதுகாக்க காவிரியில் கர்நாடகம் தொடர்ந்து நீரைதிறந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்ற பொருட்களை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
- கிராமங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை பணிகளை பரப்புவேன்.
கும்பகோணம்:
சமூக கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்து கிராம சமுதாய மக்கள் விழிப்பு ணர்வு பெற்று வளர்ச்சி பெற இந்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் 108இடங்களை
தேர்வு செய்து அதில் கும்பகோணம் சுற்றியுள்ள சூரியனார் கோவில், கஞ்சனூர், திருநாகேஸ்வரம் நவக்கிரக கோயில்களில்
தூய்மை பிரச்சாரம், உறுதிமொழி பிரச்சாரம், விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சி கள் உலக சுற்றுலா தினத்தில் நடைப்பெற்றது.
தூய்மை பிரச்சாரத்தை சூரியனார்கோவில் ஆதினம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ராமலிங்கம் எம்.பி, முன்னாள் எம்.பி. பாரதிமோ கன், ஒன்றிய குழு துணைத்த லைவர் கோ.க.அண்ணா துரை, தெற்கு மண்டல சுற்றுலா துறை அதிகாரி மாரிமுத்து, டாபி மாநில தலைவர் ஜாஹிர் உசேன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து முன்னதாக எனது குடும்பம், எனது ஊர், எனது கிராமம் மற்றும் எனது பணியிடத்து டன் தூய்மைக்கான தேடலை தொடங்குவேன் எனவும், உலக நாடுகள் தூய்மையா னவை என்றும் அவர்களின் குடிமக்கள் குப்பை கொட்டு வதில் ஈடுபடுவதில்லை எனவும், இந்த உறுதியான நம்பிக்கையுடன், கிராமங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை பணிகளை பரப்புவேன் எனவும் 100 மணிநேரத்தை தூய்மைக்காக செலவிட முயற்சி செய்வது என்றும்,
தூய்மையை நோக்கி எடுக்கும் ஒவ்வொரு அடியும் எனது நாட்டை தூய்மையாக மாற்ற உதவும் என்றும்சுத்த மான தேசமே ஆரோக்கியமான தேசம் என மாணவர்கள் தூய்மை உறுதிமொழியை எடுத்தனர்.
மேலும் பள்ளி மாணவ ர்கள் கை உறை அணிந்து கோவில் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்ற பொரு ட்களை அகற்றி தூய்மை பணிகளை செய்தனர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகி மகாலிங்கம், அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி இணை செயலாளர் சிராஜுதின், பள்ளி தாளா ர்கள், தலைமை ஆசிரி யர்கள், உள்ளாட்சி பிரதிநிதிக ள்,கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர முடியவில்லை.
- வருகின்ற ஜனவரியில் எங்களது முழு நிலைப்பாட்டை தெரிவித்து விடுவோம்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க பிரிந்துள்ளது.
ஜெயலலிதா பற்றி பேசும்போது அமைதியாக இருந்தவர்கள். இப்போது டெல்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.
அதுதான் கூட்டணி விரிசலுக்கு காரணமாக உள்ளதா அல்லது அதையும் தாண்டி வேறு காரணம் உள்ளதா என தெரியவில்லை.
ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி தான் உண்மையான அ.தி.மு.க.
மக்கள் மத்தியில் தி.மு.க. கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளது.
2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி பலத்தால் வென்றனர்.
தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வென்றால் தமிழகத்திற்கு அனைத்து கிடைக்கும் என்கிறார்கள்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர முடியவில்லை. இவர்கள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்ற முடியாது.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் தருவோம் என்றார்கள்.
தற்போது உரிமைத்தொகை கிடைக்காத ஒவ்வொரு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
இந்த ஆட்சி விடியல் தரும் ஆட்சி அல்ல. சசிகலாவிடமிருந்து பன்னீர்செல்வம் பிரிந்து சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைந்தாலும் மாநிலத்தின் உரிமைகளுக்கு மாநில கட்சிகள் தான் போராட முடியும்.
அதேபோல் பாராளுமன்றத் தேர்தலிலும் மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் போது தான் தட்டிக் கேட்க முடியும்.
இரட்டை இலை மட்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க மூட்டையிலிருந்து நெல்லிக்காய் போல சிதறும். ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். அப் போது தான் உள் ஒதுக்கீடு செய்ய முடியும்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக அ.ம.மு.க.வுக்கு மக்கள் அமோக ஆதாரவு அளிப்பார்கள்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்.
அப்படி வாய்ப்பு இல்லை என்றால் தனித்து போட்டியிட முடிவு செய்வோம். வருகின்ற டிசம்பர் , ஜனவரியில் எங்களது முழு நிலைப்பாட்டை தெரிவித்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது
- கூட்டுறவு சங்க வங்கிகளில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் தமிழ்நங்கை விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே, உரிய காலத்திற்குள் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்க வங்கிகளில் அளிக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் தங்களது பெயர் அ-வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். மேற்படி அ-வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்போது எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும்.
எனவே, மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்க வங்கி களில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல் அவைகளை பாதுகாக்க வேண்டும்.
- முன்னதாக லயன்ஸ் சங்க செயலாளர் சிவ. நாடிமுத்து அனைவரையும் வரவேற்றார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கம், பட்டுக்கோட்டை ஹோஸ்ட் லயன் சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா வார விழா மற்றும் மரம் நடும் துவக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பட்டுக்கோ ட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவரும் திருச்சி கோட்ட ரெயில்வே உபயோகிப்போர் குழு உறுப்பினருமான ஜெயராமன் தலைமை வகித்தார்.
லயன் சங்கத் தலைவர் அன்பழகன் ரெட் கிராஸ் சங்கத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லயன்ஸ் சங்க செயலாளர் சிவ. நாடிமுத்து வரவே ற்றார். புதுடில்லி காவல்துறை கூடுதல் ஆணையாளர் சத்தியசுந்தரம் ஐ.பி.எ.ஸ். தூய்மை பணியையும் மரம் நடும் விழாவையும் துவக்கி வைத்து பேசுகையில் :
மக்கள் ஆரோக்கியமாக வாழ தூய்மை மிக அவசியம். எனவே பொது இடங்களையும் , நமது நாட்டையும் தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.
அதுபோல நம் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகா க்கவும் நல்ல காற்றினை நாம் சுவாசிக்கவும் நிறைய மரங்களை நாம் வளர்க்க வேண்டும்.
மரக்கன்றுகளை நடுவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் அனைவரும் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .
அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் 100 பேர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகங்கள், ரயில் பாதைகள், சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பை களை அகற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நிலைய தலைமை அதிகாரி மருது பாண்டியன் விதை அறக்கட்டளை நிறுவனர் சக்தி காந்த், பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கத்தின் மரம் வளர்ப்பு ஒருங்கிணை ப்பாளர்கள் ராமமூர்த்தி, சுப்பிரமணி, சங்கர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .
முடிவில் பட்டுக்கோ ட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் விவேகானந்தம் நன்றி கூறினார்.
- அமில கரைசல் மூலம் உப்பு அடைப்பான்கள் நீக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
- முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் குப்பதேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயி களுக்கு பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேதுபா வாசத்தி ரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ஜி.சாந்தி தலைமை வகித்தார்.
வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் செந்தில்கு மார் பயிற்சி குறித்து விவசாயிகளிடம் பேசியதா வது, நுண்ணீர் பாசன கருவிகள் மற்றும் அவற்றின் பராமரிப்பு முறை குறித்தும், சொட்டுநீர் பாசன கருவிகளான வடிகட்டி, அழுத்தமானி, சொட்டுநீர் பாசன குழாய்கள், வெஞ்சுரி (உரம் செலுத்தும் கருவி) ஆகியவற்றின் பராமரிப்பு முறைகள், சொட்டு நீர் பாசனம் அமைக்க தேவைப்ப டும் ஆவணங்கள்.
அமில கரைசல் மூலம் உப்பு அடைப்பான்கள் நீக்கும் முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.மேலும் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுக ளை ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் தமிழழகன், ஜெயக்குமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா ஆகியோர் செய்திரு ந்தனர்.
முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரம ணியன் நன்றி கூறினார்.
- தமிழக முதலமைச்சர், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீருக்காக கர்நாடகத்தை நாடி இருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 1968-ம் ஆண்டிலிருந்தே காவிரி நதிநீர் பிரச்சனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. ஆண்ட கட்சிகள், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது தான் உண்மை. இனிமேலாவது காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் தான் காரணம். இது நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தே.மு.தி.க எடுக்கும். உரிய நேரத்தில் தே.மு.தி.க நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார்.
தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது.
- என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனால் இதை நான் வரவேற்கிறேன். நாட்டில் சிறந்த பிரதமர் என்றால் அது விபிசிங் தான். அவர் 2 ஆண்டுகள் ஆண்டாலும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சிறந்த ஆட்சியை தந்தார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு பா.ஜ.க., காங்கிரசை ஒரே கட்சியாத்தான் பார்க்கிறேன். நான் தனித்து தான் போட்டியிடுகிறேன். காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் உருவ படங்கள் கர்நாடாகவில் எரிக்கப்பட்டது. அதை கூட்டணி கட்சிகள் கண்டிக்கவில்லை. ஆதனால் நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தே.மு.தி.க என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
- மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
கர்நாடக அரசு உரிய தண்ணீர் வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது. கண்முன்னே வாடிய பயிரை கண்டு விவசாயி ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்தினரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். தே.மு.தி.க நிர்வாகிகள் நேரில் சென்று ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நாட்டிற்கே உணவு அளிப்பவர்கள் விவசாயிகள்.
ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீருக்காக கர்நாடகத்தை நாடி இருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 1968-ம் ஆண்டிலிருந்தே காவிரி நதிநீர் பிரச்சனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. ஆண்ட கட்சிகள், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது தான் உண்மை. இனிமேலாவது காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நதிநீர் இணைப்பே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். தே.மு.தி.க என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
தற்போது வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தண்ணீர் கடைமடை வரை நிச்சயமாக செல்லாது.
டெல்டா மாவட்டங்களில் சரியாக தூர்வாரவில்லை. மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. பருவ காலங்களில் பெய்யும் மழை நீர் எங்கு செல்கிறது. அதனை முறையாக சேமிக்கவில்லை. தடுப்பணைகளை அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காவிரி பிரச்சனை வருகிறது. மழைக்காலம் வந்தால் மறந்துவிடுகிறோம்.
உண்ணாவிரத நோக்கம் குறித்து கவர்னரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய நிவாரணம் என்பது தற்காலிக தீர்வுதான். அவர்களுக்கு தேவை நிரந்தர தீர்வு. எப்பொழுதுதான் அந்த நிரந்தர தீர்வை நாம் அளிக்கப் போகிறோம். எத்தனை வருடங்கள் போராட போகிறோம் .இதற்கு நிரந்தர தீர்வு வர வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் தான் காரணம். இது நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தே.மு.தி.க எடுக்கும். உரிய நேரத்தில் தே.மு.தி.க நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார்.
தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடந்தது.
- 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
தஞ்சாவூர்:
உலக சுற்றுலா தின விழாவின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சியினை தேசிய விருது பெற்ற தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் சம்பாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குழுவினர் 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் மரப்பலகை, பருத்தித் துணி, புளியங்கொட்டை பசை கொண்டு பலகை தயாரிக்கும் பணி குறித்தும், தேவையான வரைபடத்தை உருவாக்குதல் எப்படி என்பது குறித்தும், தொடர்ந்து வண்ண கற்கள் பதித்து மாவு வேலைப்பாடு செய்வது குறித்தும், தங்க இதழ் பதித்தல் குறித்தும், நிறைவாக வண்ணம் தீட்டி ஓவியத்தை நிறைவு செய்தல் குறித்தும் படிப்படியாக செய்து காண்பித்தனர்.
இதில் பங்கேற்றவர்கள் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் தொடர்ந்து இது போன்ற பயிற்சி முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக இப்பயிற்சியினை இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குனர் பத்மாவதி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், கணக்கு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கால்நடை ஆய்வாளர் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துராஜா தலைமை தாங்கினார்.
கோட்ட செயலாளர்கள் ஜெகதீஷ், டோனிபிரிட்மேன், சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இணை செயலாளர் சாமி. கோவிந்தராஜ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தமிழ்வாணன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்ட பாணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கால்நடை ஆய்வாளர் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி6-வது ஊதியக்குழுவில் வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணிஜெயந்தி நன்றி கூறினார்.
- 25 காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு நிழற்குடைகள் வழங்கினார்.
- விளம்பு நிலை குடும்பத்தினருக்கு புதிய தையல் எந்திரமும் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
சாலையோரம் காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகள் தற்போது ஆரம்பித்துள்ள மழை காலத்திலும் தங்களது தொழிலை தடங்கலின்றி தொடர்ந்து செய்யும் வகையில் பெரிய அளவிலான நிழற்குடைகள் ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
தஞ்சை நகர பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு அவரவர் பணி செய்யும் இடத்துக்கே நேரில் சென்று இந்த குடையை ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினார். மேலும் கோரிக்கையின் அடிப்படையில் விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் புதிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறும்போது, "ஜோதி அறக்கட்டளை மூலம் மாநிலம் முழுவதும் விளிம்பு நிலை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காலணி பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கு மழை காலத்திலும் தங்களது வேலை தடைபடாமல் தொடர நிழற்குடைகள் தொழிலாளிகள் பணி செய்யும் இடத்துக்கே நேரில் சென்று வழங்கப்பட்டது. மேலும் விளம்பு நிலை குடும்பத்தினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு புதிய தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது . மொத்தத்தில் ரூ. 65,000 மதிப்பீட்டில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன " என்றார்.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்கு மார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






