search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Demudika"

  • மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
  • தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது.

  மதுரை:

  விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேய நத்தத்தில் உள்ள வீரசின்னம்மாள் கோவில் உள்ளது. தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் குலதெய்வ கோவிலான இங்கு சாமி கும்பிடுவதற்காக பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் மட்டும் சோதனை செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சோதனைக்கு பின்னர் என்ன என்பது மர்மமாகவே உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.

  தமிழகத்தில் அதிகமாக லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. அதனால் இது போன்ற சோதனைகள் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த சோதனையை தே.மு.தி.க. வரவேற்கிறது.

  பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது. நிச்சயமாக ஜனவரி மாதம் கூட்டணி குறித்தும், தே.மு.தி.க. நிலைப்பாடு குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தமிழகத்தில் பட்டாசு வெடி விபத்து அதிகமாக உள்ளது.

  அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சனையில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி வந்தாலும் இதே நிலை தான் தொடர்கிறது. மத்திய அரசு தலையிட்டு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

  தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது. உரிமைக்காக போராடுபவர்கள் நியாயமான கோரிக்கையாக இருந்தால் நிச்சயமாக அரசு அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.

  இஸ்ரேல் போரில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கை தாமதமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • தமிழக முதலமைச்சர், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  தஞ்சாவூர்:

  டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

  ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீருக்காக கர்நாடகத்தை நாடி இருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 1968-ம் ஆண்டிலிருந்தே காவிரி நதிநீர் பிரச்சனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. ஆண்ட கட்சிகள், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது தான் உண்மை. இனிமேலாவது காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் தான் காரணம். இது நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தே.மு.தி.க எடுக்கும். உரிய நேரத்தில் தே.மு.தி.க நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார்.

  தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வது கிடையாது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ×