search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கிப்பட்டியில், விவசாயிகள் சங்க மாநாடு
    X

    செங்கிப்பட்டியில், விவசாயிகள் சங்க மாநாடு

    • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • கருகும் பயிர்களை பாதுகாக்க கர்நாடகம் காவிரி நீரை‌ திறந்து விட வேண்டும்.

    பூதலூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட 24-வது மாநாடு செங்கிப்பட்டியில் கலிய பெருமாள், முத்துக்கண்ணு ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

    மாநாட்டின் முதல் நிகழ்வாக அரங்கத்தின் வெளியே கடைத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த சங்க கொடியினை வீரப்பன் ஏற்றி வைத்தார்.

    மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாநில பொதுச்செ யலாளர் மாசிலாமணி,தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாள சக்திவேல், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலெட்சுமி, நிர்வாகிகள் சேவையா, திருநாவுக்கரசு, பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சிசெயலாளர் முகில் உள்ளிட்டோர் பேசினர்.

    சங்கத்தின் மாவட்ட பொறுப்பு செயலாளர்.பாஸ்கர் வேலை அறிக்கை, வரவு செலவு அறிக்கை முன்வைத்து பேசினார்.

    மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் மாவட்ட தலைவராக ராமச்சந்திரன், செயலாளராக பாஸ்கர், பொருளாளராக சவுந்தர ராசன் உள்ளிட்ட 27 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாநாட்டில் நடப்பாண்டு பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை பாதுகாக்க காவிரியில் கர்நாடகம் தொடர்ந்து நீரைதிறந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    Next Story
    ×